பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 எஸ். எம். கமால் இம்மைக்கும் ஏழ், ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான், நம்மை உடையவன் நாராயணன் நம்பி, செம்மை உடைய திருக்கையால் பிராட்டியின் கைத்தலம் பற்றும் ஒப்பில்லாத மகிழ்ச்சியல்லவா அது அத்யாயன பட்டர்கள் வேத கலோகங்களை உச்சரித்தனர். மணமக்களுக்கு முன்னிருந்த ஹோம குண்டலத்தில் அக்னி கொழுந்துவிட்டு எரிந்தது. பட்டர்கள் ஒதுகின்ற மந்திரங்களுக்குத் தக்கவாறு குண்டத்தில் ஊற்றப்படும் நெய்யைக் குடித்த, தீயின் கொழுந்துகள், உயர்ந்து எழுந்தும், தாழ்ந்தும் எரிந்து கொண்டிருந்தது. பஞ்சகச்சமாக வெள்ளைப் பட்டு வேட்டியை அணிந்து சிவப்பு பட்டுத் துண்டை இடுப்பிற்கு கீழாக ஒரு முழம் விட்டு இடுப்பில் சொருகி அணிந்து இருந்த, இருபட்டர்கள் இருபுறமும் நின்று கொண்டு அந்தத் தெய்வத் திருமேனிகள் சார்பாக எல்லச் சடங்குகளையும் நிறைவேற்றினர். இறுதியாக தாரைவார்த்துக் கொடுத்து அக்கினி சாட்சியாக, பெருமாள் பிராட்டிக்கு மங்கள சூத்திரம் அணிவித்ததும் அந்த திருமண வைபவம் முடிந்தது. மண்டபத்தில் இரு புறமாக மக்கள் "கோவிந்தா, கோவிந்தா" என மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். தெய்வத்திருமேனிகளை மங்கள வாத்தியம் முழங்க திருக்கோயில் முகப்பில் உள்ள காங்கேயன் மண்டபம் வழியாக வடக்கே அலங்கரிக்கப்பட்டு நின்ற புதிய தேருக்கு எடுத்து சென்றனர். தேர்நிலை மண்டபம் வழியாக தேருக்குள் சென்றனர். அதற்கு கீழ்பகுதியில் நாதசுவரக் குழுவினர் அமர்ந்து நாயனத்தை இசைக்கத் தொடங்கினர். தேரின் நான்கு சக்கரங்களுக்கு அடியில் எழுமிச்சம்பழங்களை வைத்தனர். தேரின் முன்நின்றுகொண்டிருந்த பட்டர் தேருக்கு தீபாராதனை நடத்தி திருஷ்டி கழித்ததும் கோயில் அலுவலர் தேருக்கு முன்னர் சாமியைக்கும்பிட்டு"சிதறுகாயாக" தேங்காயைத் தேரின் முன் உடைத்தார். தேரின் வலது இடது புறங்களை இணைத்த வடங்களை இழுக்க நூறு கெஜ தூரம் வரை மக்கள் நின்றுகொண்டிருந்தனர்.