பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.342 எஸ். எம். கமால் தச்சர்களது கைவண்ணத்தில் உருவான அழகுக் கருவூலமாகும். தேர் கிழக்கே சென்று சேதுக்கைர வீதியில் திரும்பி, பிறகு மேற்கே தெற்கு வீதியில் சென்றது. பின்னர் வடக்கு ரதவீதியைக் கடந்து கிழக்கே சென்று நிலைகொள்ள வேண்டும். உச்சிவேளை நெருங்கிக்கொண்டிருந்தது, வெயில்,வியர்வை, களைப்பு, இவைகளினால் உற்சாகம் குறையவில்லை. ஒரு வகையாக தேரை இழுத்து வந்துவிட்டனர். தேர்நிலைக்கு வந்துகொண்டிருந்தது. அதனை எதிர்பார்த்து அங்கு நின்றுகொண்டிருந்தார் சேதிபதி மன்னரும் கோவில் பணியாளர்களும். "சக்கரத்தீர்த்தக்கரையில் இருந்து அதிர் வேட்டுகள் மீண்டும் இரண்டு முறை முழங்கின. தேரோட்டம் முடிவுறுவதைக் குறிப்பிட" பிரதானி வேகமாக மன்னர் அருகே வந்தார். அவரது நிலையைக் கண்ட சேதுபதி மன்னரது பார்வை, பிரதானியின் பதற்றத்திற்கான காரணத்தை வினவுவஸ்ததுபோல இருந்தது. அப்பொழுது தெற்கே இருந்து துப்பாக்கிகளை சிலர் வானை நோக்கி சுட்டவாறு தேர்நிலை கொட்டகை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். "பட்...பட்..." துப்பாக்கி வேட்டுகளின் தொடர் சத்தம். "மகாராஜா எதிரிகள் ஆயுதபாணிகளாக இங்கு வந்து கொண்டு இருக்கின்றனர். சுமார் இம்பது அறுபது துப்பாக்கி வீரர்கள், தெற்கு ரத வீதி முடிவில் தேர் செல்லும் போது மாட்டு வண்டி ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த் துப்பாக்கிகள் சரிந்துவிழுவதை தற்செயலாகப் பார்த்தேன். தொடர்ந்து கண்காணித்தேன். மேற்குரதவீதியில் நான்கு வண்டிகளில் ஆயுதங்களும், கருமருந்துப் பொதியும் காணப்பட்டன. அப்படியே மேற்கு ரத வீதியில் இருந்து, வடக்கு ரத வீதிக்கும் விரைவாகச் சென்று கவனித்தபொழுது, அதோ தேர் கோட்டைக்கு வடக்கில் சாலை அருகில் நான்கு வண்டிகள் ஆயுதங்களுடன் தேரைச் சூழ்ந்தும், சந்தேகம் கொள்ளும்படியான நபர்கள் வந்துகொண்டு