பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் (1.1.) இருந்தனர். - - - இதோ இப்பொழுது கேட்கும் துப் பாக்கிச் சதி, மும் தெற்கே இருந்து வருகிறது....." பிரதானி இவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, சோ மேற்கே இருந்து வந்து நிலையில் நின்றுவிட் I Invһ~n n/1 பெருமாளை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கினர். இப்பொழுது வடக்கே இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம். "இதோ அதுவும் அவர்கள்தான். இரண்டு பக்கங்களிலும் இருந்து வந்து நம்மை நெருங்கி பிடிக்கத் திட்டம். அவர்களை சில நொடிகளில் மட்டும் சமாளிக்கலாம். ஆயுதம் இல்லையே! என்ன செய்யலாம் நமக்கு பாதுகாப்பு வீரர்கள் இருபது பேரும் உள்ளனர். சத்திரத்தில் உள்ள வீரர்களை உதவிக்கு அழைக்கவா? அல்லது பொதுமக்களைக் கொண்டு அவர்களைச் சமாளிக்கலாமா?" அபாயத்தை உணர்ந்த பிரதானி, பதட்டத்துடன் மன்னரது உத்திரவைக் கோரினார். ஆனால், மன்னரது முகத்தில் தோன்றிய வியப்புக் குறிகள், சில வினாடிகளில் மறைந்து இயல்பான நிலையில் மன்னர் காணப்பட்டார். அபாயமா? ஆச்சரியமா? ஆத்திரமா? பதட்டமா? எந்த ஒரு உணர்வுக்கும் இடம்கொடாத இயல்புநிலை, அதே நிலையில் பெருமாளைக் கண்குளிர சேவித்தார். அந்த திவ்யதரிசனத்திற்கு மேலான ஒன்று உண்மையான பக்தனுக்கு இருக்க முடியாது அல்லவா? அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைக்கும் இந்தப் பெருமாளை சரணடைந்த பிறகு, எதைப் பற்றியும் ஏன் கவலைப் பட வேண்டும்? சேதுபது மன்னரது இத்தகைய மனோபாவத்தை வெளிப்படுத்துவது போல பிரதானிக்குத் தோன்றியது, என்றாலும் மன்னரது மனப்பக்குவம் அவருக்கு இல்லை. மன்னரையும் கலகக்காரர்கள் வரும் திக்கையும் மாறி மாறிப் பார்த்தவராக சஞ்சலத்முடன் நின்றுகொண்டிருந்தார் பிரதானி