பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 எஸ். எம். கமால் - அப்பொழுது துப்பாக்கிகள் வெடிப்புச் சத்தம் நெருக்கத்தில் கேட்டது. கலகக்காரர்கள் தேரை நோக்கி ெ நருங்கி வருகின்றனர். ஆனால், மன்னரோ பக்திப் பரவசத்தில் மூழ்கியவராக, கண்களை மூடி வாயில் எதனையோ முணுமுணுத்தவராக காணப்பட்டார். அடுத்த விநாடி மூர்ச்சையுற்றவராக தடாலென தரையில் சாய்ந்தார். இதனை எதிர்பாராத பிரதானி மன்னரைத் தாங்கிப் பிடிக்க அங்கு நின்றுகொண்டிருந்த கோயில் பட்டரும் பிரதானியுடன் சேர்ந்து, மன்னரது உடலை மெஸ்துவாக தரையில் கிடத்தினர். புனித சேதுநாட்டின் அரசியலுக்கு பெருமையும் புகழும் சேர்த்தசேதுபதி மன்னரது ஆன்மா, பெருமாளின் பேரழகில் சொக்கி சுவைத்த பேரின்பக் கடலில் ஆழ்ந்து மறைத்துவிட்டது. o - தேரை நோக்கி வந்த கலகக்காரர்களும், அவர்களுடன் சற்று முன்னர்தான் மரணத்தைத் தழுவிய சேதுபதி மின்னரது சடலத்தைப் பார்த்து திகைப்பும் அதிர்ச்சியும் தாக்கப்பட்டவர்களாக அப்படியே நின்றனர். அப்பொழுது, கோயிலுக்குள் இருந்து வந்த மகாராணி கலாதேவியும் தேருக்கு முன்னால், பெருமாளது திருவடிகளில் சரணடைந்தவர்போல் கிடந்த மன்னரது சடலத்தைக்கண்டு துடிதுடித்து அலறி மூர்ச்சையுற்றார். "மகாராணி மகாராணி" என்ற அழைப்புக் குரல் கேட்டு கலாதேவி மூர்ச்சை தெளிந்து எழுந்தார். உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பவர் போல் காணப்பட்ட மன்னரது உயிரற்ற சடலத்தையும் தேரில் அமர்ந்துள்ள பெருமாளையும் ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பிய பார்வை துப்பாக்கி வெடித்த கலகக்காரர் தலைவராக நின்ற இளந்துறவி வீர நரசிம்மன் மீதும் பட்டது.