பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கடைசிவரிகள்.... இதுவரை இந்தப் புதினத்தை ஆர்வமுடன் படித்து முடித்த வாசகர்களது இதயங்களில் சில கேள்விகளை எழுந்து விடைகான முயல்வதை நானும் உணர்கிறேன். மதுரை மன்னர் திருமலை நாயக்கரது நலனுக்காக மறவர்கள் எட்டையபுரம், அம்மை நாயக்கனுார் போர்களில் சேதுபதி மன்னர் பலி கொடுத்ததைக் கண்டித்தும், ஏற்கனவே தனித்தனியாக காளையார் கோவிலிலும் திருவாடானையிலும் இயங்கிய தன்னரசுகளை நிறுவவும், இராமநாதபுரத்தில் இருந்து திருமலை சேதுபதி மன்னரை அகற்றவும் கலகக்காரர்கள் திட்டமிட்டு சதி செய்தனர் அல்லவா? அவர்களில் ஒருவாரான பீரசிம்மனுக்கும், இராமநாதபுரம் சமஸ்தான ராஜ நர்த்தகிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால் மகாராணி சேது கங்கை நாச்சியார் மரணத்தருவாயில் ராஜ நர்த்தகி கலாதேவியை அவரது நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு சேதுபதி மன்னரிடம் உறுதி பெற்ற பிறகு மறைந்தார். இளந்துறவி வீரசிம்மனுக்கு இந்த அவசரத் திருமணம் தெரிய வாய்ப்பில்லை. கலகக்காரர்கள் திட்டப்படி திருப்புல்லாணி பெருமாள் ஆலயத் தேர் ஒட்டத்தன்று வடம் தொட்டுக் கொடுத்த சேதுபது மன்னரை, திடீரெனத் தாக்கி கைது செய்வற்கு முன்னர், தேர்நிலைக்கு வந்தவுடன் பெருமாளை சேவித்த நிலையில் சேதுபதி மன்னர் திடீரென மரணமடைந்துவிட்டதை கலகக்காரர்களுக்குத் தலைமை தாங்கிய பெரியவரும், வீரநரசிம்மனும் கண்டு திகைப்படைகின்றனர் அல்லவா? ஆம். இவையெல்லாம் இந்தப் புதினத்தில் படித்தவைதான். ஆனால் கலகக்காரர் தங்களது திட்டப்படி இராமநாதபுரம்.ஆறுமுகம் கோட்டை, அனுமந்தக் கோட்டைகளைப் பிடித்து தன்னாட்சியை நிறுவினார்களா? சேதுபதி மரணத்திற்கு பிறகு கலாதேவியும், வீரநரசிம்மனும் மீண்டும் சந்தித்தனரா? சேதுபதி மன்னரது மகாராணி என்ற