பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எஸ். எம். கமால் ஒலித்த பாளையக்காரரின் குரல் கேட்டு சில வீரர்கள் ஓடிவந்தனர். சிறிது துரம் சென்று இருந்த கொண்டம நாயுடுவும் அவரது மகளும் மிகுந்த பதட்டத்துடன் இடி வந்தனர். "வடக்கே ஒடுங்கள். கட்டாரியை எறிந்துவிட்டு ஒடுபவனைப் பிடியுங்கள்" கன்னிவாடி பாளையக்காரர் ஆணையிட்டார். வீரர்கள் வடக்கு திசையில் ஒடினர். தரையில் அமர்ந்திருந்த சேதுபதி மன்னரை கையை நீட்டுமாறு செய்து இரத்தக் கறைபட்ட மேலங்கியை, களைந்துவிட்டு தமது மடியில் வைத்திருந்த மருந்துப்பையை எடுத்து அவிழ்த்து, அதிலிருந்த துரணங்களையும் பச்சிலை சாற்றையும் சேதுபதி மன்னரது காயத்திற்கு தடவிக்கட்டுப் போட்டார் கொண்டம நாயுடு. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த கன்னிவாடி நாயக்கர், முக்தாலம்மாள் ஆகியோரின் முகத்தில் வேதனை தளும்பி நின்றது. "ஒன்றும் பயம் இல்லை. மூன்று நாட்களில் காயம் ஆறிவிடும் என ஆறுதல் சொல்லிய கொண்டம நாயுடு மன்னரிடமிருந்து விடை பெற்றுச் சென்றார். தயங்கியவாறு அவரது மகளும் அவரைப் பின் தொடர்ந்தார். அவளது உள்ளத்தில் மன்னரைப் பற்றிய ஒரு அழுத்தமான சிந்தனை ஒட்டம். பரிவா? அல்லது பாசமா?-அவளை ஆட்கொண்டிருந்த அந்த உணர்வுகளை எவ்விதம் குறிப்பிடுவது? அவளது முகத்தைப பார்த்தவர்களுக்குத்தான் அது புரியம்.

  • * *