பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 27 "இந்தக் கட்டாரியைப் பார். இது மதுரை நாயக்க படையினருடையதா? அல்லது மைசூர் படை வீரனுடையதா?" "மகாராஜா நினைப்பது போல் இந்த கட்டாரி அந்த இரு படைகளையும் சேர்ந்தது அல்ல. இந்தக் கட்டாரியின் கைப்பிடி அதிலே கோர்க்கப்பட்டுள்ள கத்தி அதன் அளவு, பருமன் இவையெல்லாம் நமது காளையார் கோவில் சிமை வீரர்களுடையது போன்று இருக்கிறது." "அப்படியா நமது உளவுப்பிரிவைச் சேர்ந்த சக்கந்தி பாளையக்காரர் சின்னாத்தேவரை அழைத்து வா" குமாரத் தேவன் வெளியே சென்றான். சிறிது நேரத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவரை அழைத்து வந்தான். அவர் சேதுபதி மன்னர் முன் வந்து பணிந்து நின்று கும்பிட்டார். "சக்கந்திதேவரே இந்தக் கட்டாரியைப் பாருங்கள் இது யாருடையதாக இருக்கும்." அதனைப் புரட்டிப் பார்த்த சக்கந்தித் தேவர், "மகாராஜா, இது நமது அஞ்சு கோட்டைப் படை பிரிவினரைச் சேர்ந்தது." "சரியாகப் பார்த்துச் சொல்லும்." "நிச்சயமாக இது நமது அஞ்சு கோட்டை வீரனுடையதுதான்."