பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எஸ். எம். கமால் "சரி. இதனைப் பத்திரப்படுத்தி வைத்து, நாம் இராமநாதபுரம் கோட்டை சேர்ந்தவுடன் நம்மிடம் ஒப்படைக்க வேண்டும்." மன்னரது கட்டளையைத் தெரிவித்த பிறகு, கட்டாரியுடன் சக்கந்தித் தேவர் மன்னரை வணங்கிவிட்டுச் சென்றார். அதுவரை மன்னரது உரையாடலை கவனித்து வந்த கன்னிவாடி பாளையக்காரர், சேதுபதி மன்னரது ஊகத்தை நினைத்துப் பார்த்து வியப்படைந்தார். அப்படியானால் அந்த கட்டாரியை வீசியவன் மறவர் சீமையைச் சேர்ந்தவனா? எந்த நோக்கத்தில் கட்டாரி வீசப்பட்டு இருக்க வேண்டும் குறிதவறியதே ஒழிய ஆபத்து நீங்கவில்லை என்றுதானே பொருள். இந்த சிந்தனையில் இருந்த மன்னர், "நாம் எப்போது புறப்படலாம்"கன்னிவாடி நாயக்கரைக் கேட்டார். "மகாராஜா, காலைக் கடன்களை முடித்தவுடன் புறப்படலாம்" என்று சொல்லிய பொழுது வைத்தியம் கொண்ட நாயுடு அங்கு வந்தார், "மகாராஜா நமஸ்காரம்" I. o .. ■■ வாருங்கள "இரவு உறக்கம் இருந்ததா? வலி எப்படி" "நன்றாகத் துரங்கினேன். கண் விழித்த பிறகுதான் காயத்தைப் பற்றிய எண்ணம் ஏற்பட்டது."