பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 29 "சந்தோசம். இந்த சூரணத்தையும் மூன்று நாட்களுக்கு காலை, மாலை சாப்பிடுங்கள். இரத்த ஒட்டம் அதிகரிக்கும். புண்ணும் வேகமாக ஆறிவிடும்." "குமாரத் தேவா" "மன்னர் பணியாளை அழைத்தவுடன் அவன் ஒரு தட்டினில் பொற் கிழி ஒன்றை வைத்து எடுத்து வந்தான்." "அதை நாயுடுவிடம் கொடு" "இதெல்லாம் எதற்கு சமஸ்தானம் தயவு இருந்தால் அதுவே போதுமானது." "தக்க சமயத்தில் உதவினிர்கள். அதற்கு எந்தப் பொருளும் ஈடாகாது. அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். சரி, புறப்படுகிறேன். திரும்பும் போது சந்தித்துக் கொள்ளலாம்." "மகாராஜா உத்திரவு" வைத்தியம் கொண்டம நாயுடு அங்கிருந்து பொற்கிழியுடன் சென்றார். மன்னருக்கு மாற்று உடைகளையும் பயணத்திற்கான அலங்காரப்பொருட்களையும் மன்னர் முன் கொண்டு வந்து வைத்து காத்து நின்றான் குமாரத்தேவன். "சிற்றுண்டித் தயாராகிவிட்டதா" "ஆம் மகாராஜா" "கத்தரி நாயக்கர் எங்கே அவரை அழைத்து வா."