பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எஸ். எம். கமால் அப்பொழுது அவரும் வந்து விட்டார். இருவரும் சாப்பாட்டு நாற்காலியில் அமர்ந்தனர். பணியாள் பரிமாறிய இனிப்பு அப்பத்தையும், கார அடையையும் உண்ணத் தொடங்கி. னார். இடையிடையே நேற்றைய இரவு நாட்டிய நிகழ்ச்சி பற்றி இருவரும் பேசிக் கொண்டும் இருந்தனர். அடுத்து, s -- s s * = TI -- - + וח கன்னடப்படைகள் எத்தனைபேர் இருப்பார்கள்? மன்னரது வினா. "சுமார் ஐயாயிரம் பேர் இருக்கலாம்." "அவர்கள் செல்லும் வழி பற்றிய தகவல் நம்மிடம் இருக்கிறதா?" "எதிரிகள் தாராபுரம் நோக்கி பின் வாங்குவதாக தகவல், கரூர், நாமக்கல், இதர் வழியாக ஏற்கனவே வந்தார்கள். ஆனால் இப்பொழுது உயிர்பிழைக்க ஓடுவதால் கரூர் சென்று காவிரியை ஈரோடு அருகில் கடந்து மேலைமலையைச் சுற்றிக்கொண்டு தோப்பூர் கணவாய் வழியாகத்தான் அவர்கள் மைசூர் செல்ல வேண்டும். நாம் தாராபுரம் சென்றவுடன், கரூரை விலக்கிச்செல்ல இருக்கிறோம். காட்டுப்பாதை வழியாகே அடிவாரத்திற்கு அவர்களுக்கு முன்பே சென்று காத்திருப்போம். அவர்கள் வந்ததும் திடீர் தாக்குதல் நடத்த திட்டம்." | * - -- * - - கரூர் செல்லாமல் பழைய பாதையில் அவர்கள் சென்றால் எப்படி அவர்களை வழி மறிக்க முடியும்?" என்று மன்னர் கேட்டார். "இந்தக் காட்டுப்பாதை வழியாகவே அவர்களும் செல்வதாக வைத்துக் கொண்டாலும், அவர்கள் மேலை மலையைச்