பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 33 அடுத்து குதிரை அணியின் ஒட்டத்தில் சற்று விரைவு தென்பட்டது. தோப்பூர் கணவாயில் கன்னடப் படைகளை திட்டமிட்டபடி அழித்து திரும்பிய மதுரை அணி திரும்பி வந்துகொண்டிருந்தது. அணிக்கு தலைமை தாங்கிய சேதுபதி மன்னரும் கன்னிவாடி நாயக்கரும் கம்பீரமாக வந்துகொண்டு இருந்தனர். துாரத்தில் சிறுமலையின் பின்னணியில் அந்த கிராமத்து பெருமாள் கோயிலின் கோபுரம் அந்தி நேர வெயிலில் அழகாகக் காட்சி அளித்தது. அவர்கள் தாடிக்கொம்பு கிராமத்திற்கு வந்தபொழுது அவர்களுக்கு இரவு உணவு தங்கும் வசதி ஆகியவைகளை முன்னணித் தளபதிகள் செய்துகொண்டு இருந்தனர். கோவில் முகப்பில் குதிரைகளில் இருந்து சேதுபதி மன்னரும் கன்னிவாடி பாளையக்காரரும் இறங்கி பெருமாளை சேவித்து நின்றனர். "மகாராஜா, நமஸ்காரம்.... இயா உங்களுக்குந்தான்" என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். ஏற்கனவே அங்கு வந்து காத்து இருந்த வைத்தியம் கொண்டமநாயுடு கை கூப்பி வணக்கம் சொல்லியவாறு நின்று கொண்டு இருந்தார். "வாருங்கள் மண்டபத்திற்குள் செல்லலாம்"கன்னிவாடி நாயக்கர் கொண்டம நாயுடுவை அழைத்தார், மூவரும் மண்டபத்திற்குள் சென்றனர். மன்னரை கொண்டம நாயுடு கேட்டார், "காயம் ஆறிவிட்டதல்லவா." "ஆமாம். தங்களது மருந்துகள் மிகவும் மேலானவை. எங்களது சீமையிலும் பரம்பரை ஜருத்துவர் இருக்கின்றனர். ஆனால் தகுந்த மூலிகைகள்தான் அவர்களுக்கு கிடைப்பது இல்லை."