பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எஸ். எம். கமால் "எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை. பக்கத்தில் உள்ள சிறு மலையில் ஏராளமான மூலிகைச் செடிகள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி சென்று திரும்பியபொழுது அங்கிருந்தும் சில முக்கியமான மூலிகைகளை சூரணம் செய்துகொண்டு வந்தேன். அவைகளையும் இங்கே பயன்படுத்தி வருகிேறன்." "தங்களது பூர்வீகம் திருப்பதி என்றுதானே சொன்னிர்கள்" "ஆம் மகாராஜா எங்களில் முன்னோரில் ஒருவரான கொண்டம ராசய்யா என்பவர் விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் ராயசமாகப் பணியாற்றி வந்தார். மன்னரது தென்னாடு விஜயத்தின் போழுது ராயசம் கொண்டம ராசய்யாவும் உடன் வந்தார். அப்பொழுது மன்னரிடமிருந்து தானமாகப்பெற்ற இந்த ஊரில், இருபத்து நான்கு வீடுகள் கட்டி மக்களைக் குடியமர்த்தியதுடன் தனது தாயார் முக்தியாம்பாள் அம்மாள் பெயரில் ஒரு மண்டபமும் கட்டினார். பத்ராசலம் ரீ இராமபிரான் மீது பக்தி கொண்ட ராமதாஸரைப் போல இந்த ஊர் செளந்திர ராஜ பெருமாள் மீது அவருக்கு அலாதியான பக்திப் பிரவாகம்" "அப்படியானால் அவரது ஜீவியம் இந்த பெருமாள் சேவையில் கழிந்தது. அப்படித்தானே?" "ஆமாம்! மகாராஜா, அவருக்குப்பின் அவரது பங்காளிகள் அந்த ஊழியத்தைத் தொடர்ந்து செய்துவந்தனர். சுமார் இருபத்து இந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வம்சா வழியில் மிஞ்சிய எனது பெரிய தகப்பனார், உடல் நலிவாக இருப்பது தெரிந்து, எனது வளர்ப்புத் தாயார். ஹம்ச நந்தினி