பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 35 என்னை, இங்கே அனுப்பி வைத்தார். அவரும் ஒரு சிறந்த கர்த்தசி. இளமையிலேயே பெற்றோரை இழந்த என்னை வளர்த்து ஆளாக்கியதுடன், அவருக்குப் பிடித்தமான நாட்டியக் கலையையும் இசை ஞானத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார். இங்கே வந்த பிறகு அவைகளில் ஈடுபடுவதற்கு எனக்கு வாய்ப்பே இல்லை. பெருமாளுக்கு சேவை செய்வதுடன் பொது மக்களுக்கும் இலவச வைத்தியம் செய்து வருகிறேன். மக்கள் சேவையிலும் மகேசனது தொண்டிலும் பொழுது எல்லாம் கழிந்து கொண்டு இருக்கிறது." "உங்கள் குடும்பம். . . " தொடர்ந்து மன்னர் அவரை கரிசனத்துடன் வினவினார். I. + == == -- -- = |f குடும்பம். . . . நானும் முக்தாலம்மாளும்தான். - == s == == -- # II "முக்தாலம்மாள் உங்கள் மகள் அல்லவா II = * . fi ஆம்! மகள்தான் இந்த உரையாடலை இடைமறித்த கன்னிவாடி பாளையக்காரர், "மகாராஜா. கொண்டம நாயுடு இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. முக்தாலம்மாள் அவரது வளர்ப்பு மகள்" என்று சொல்லி மன்னரது வினாவிற்கு விளக்கம் அளித்தார். "உங்களது பிரம்மச்சரிய வாழ்விற்கு ஏதேனும் குறிப்பான காரணம் இருக்க வேண்டுமே" "அப்படியொன்றும் இல்லை மகாராஜா இள வயதில் பெற்றோரை இழந்ததால் என்னிடம் இயல்பான விரக்தி இருந்துகொண்டே இருந்தது. இசையிலும், நாட்டியத்திலும் பயிற்சி