பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எஸ். எம். கமால் பெற்று வந்ததால் எனது பால்ய காலம் ஒருவகையாக கழிந்துகொண்டு இருந்தது. தீடீரென இங்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பிறகு, பெருமாள் சேவையில் கோயில் கைங்கரியங்களில் நாட்களைக் கழித்துக் கொண்டு இருந்தேன், ஒழிந்த நேரங்களில் உள்ளூரில் கடுமையான நோயாளிகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து வந்தேன்." என கொண்டம நாயுடு தமது பேச்சை நிறுத்தினார். சேதுபதி மன்னரும், கன்னிவாடி நாயக்கரும், அவரை ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது மன்னரது பணியாள் குமாரத் தேவன் வந்து பணிந்து, இரவு சாப்பாடு தயாராக இருப்பதைத் தெரிவித்தார். "மகாராஜா முதலில் சாப்பாட்டை முடித்துவிட்டு வாருங்கள். எனது கதையை எப்பொழுது வேண்டுமானாலும் சொல்கிறேன்." - - * = -- s . II - = so வாருங்கள் நீங்கள் சாப்பிடலாம்" மன்னர் கொண்டம நாயுடுவை அழைத்தார். "மன்னிக்க வேண்டும், எனக்கு பகல் வேலை மட்டும் தான் உணவு. இரவில் துளசி நீர் மட்டும். பல ஆண்டுப் பழக்கம் இது." "அப்படியா? சற்று பொறுத்து இருங்கள், சாப்பாட்டை முடித்துவிட்டு வருகிறோம்." என்று சொல்லிய மன்னர் பாளையக் காரருடன் மண்டபத்திற்குள் சென்றார். கொண்டம நாயுடு ஏதோ ஒரு கீர்த்தனையை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டு இருந்தார். அரை நாழிகை நேரம் கழித்து அங்கு வந்த சேதுபதி மன்னரும், கன்னிவாடி பாளையக்காரரும், "இப்பொழுது சொல்லுங்கள்" என்று கொண்டம நாயுடுவை கேட்டுக் கொண்டனர். அவரும் தமது கதையைத் தொடர்ந்து சொல்வதற்குத் தயாரானார்.

  • * *