பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I முனைவர் கோ. விசயவேணுகோபால், எம்ஏ.எம்.லிட்பிஎச்.டி. (முன்னாள்) பேராசிரியர் & தலைவர், கலை வரலாற்றுத் துறை, மதுரைகாமராசர் பல்கலைக்கழகம். பிரஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி -1 அணிந்துரை நண்பர் டாக்டர். எஸ்.எம்.கமால் அவர்கள் சேது நாட்டு வரலாற்று நூல்கள் மூலம் மக்களிடையே நன்கு அறிமுகமானவர். ஏற்கனவே "சேதுபதியின் காதலி" என்ற வரலாற்றுப் புதினத்தை வெளியிட்டு நற்பெயர் பெற்றுள்ளார். வரலாற்றை வரலாற்று நாலாகவும் எழுதலாம், அதனை புதினத்தின் வழியாகவும் புலப்படுத்தலாம். திரு. கமால் அவர்கள் தற்போது இவ்வகையில் தமது இரண்டாவது வரலாற்றுப் புதினத்தைப் படைத்துள்ளார். வரலாறும் கற்பனையும் சரியான கலவையில் அமைந்து நமக்கு வரலாற்றையும், இலக்கியச் சுவையையும் புலப்படுத்தி நிற்கிறது. சேதுபதி மன்னர்களுள், திருமலை இரகுநாத சேதுபதி குறிப்பிடத் தக்கவர். மதுரை நாயக்கராட்சிக்குப் பெருந்துணையாக நின்றவர். தமிழ் பற்று மிக்கவர் "பாவுக்கிசைந்த ரகுநாத சேதுபதியே" எனப் போற்றப்பெற்றவர் இராமேசுவரம் திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தைக் கட்டியவர். சமயப் பொதுநோக்கில் சைவம், வைணவம், சமணம், இசுலாம் போன்ற பலமத நிறுவனங்களையும் ஆதரித்தவர். இவரது சிறப்புக்களையெல்லாம் எடுத்துக்காட்டும் வண்ணம் இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது. சென்ற புதினத்தைவிட இப்புதினத்தில் நடைநயம் மிக்குள்ளது. விரைந்து படிக்கத்தக்க விறுவிறுப்புடன் அமைந்துள்ளது. விரசமாக எழுதுதல், விரசத்தையே பார்க்கத் துண்டுதல் போன்ற இன்றைய எழுத்துச் சூழலில் இப்புதினம் விரசமற்ற தூய அன்பை மிக அழகாகச் சித்திரிக்கிறது. மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்விதலைப்படுவாரென்ற நெறிக்கேற்பப் பாத்திரம் புனையப்பட்டுள்ளது. புதினம் முழுவதும் இயல்பான பாத்திரங்கள் குறிப்பாக இளந்துறவியின் பாத்திரப்படைப்பு நாட்டுப்பற்று மிக்க ஓர் இளைஞன் எப்படியிருப்பான் என்பதை அழகாக காட்டி நிற்கிறது.