பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எஸ். எம். கமால் நிலையில் இருக்கிறான். காலையிலேயே புறப்பட்டு வந்தேன். இதுவரை அவனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நாங்கள் மிகவும் ஏழைகள் எவ்வித உதவியும் இல்லை. பெரிய மனது வைத்து எனது மகனை காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்." எனறு சொன்னாள். அந்த முதியவளது கெஞ்சுதல் கொண்டம நாயுடு உள்ளத்தை உலுக்கியது. "இங்கிருந்து எட்டுக்கல் தொலைவில் உள்ள . . . . ஊரைச் சொன்னாள். அப்பொழுது கோயிலில் நான் இருக்க வேண்டிய கட்டாயத்தை அவளுக்கு தெரிவித்து அவளை முன்னதாகவே திரும்பிச் செல்லுமாறு சொல்லிவிட்டு பிறகு, கோயில் விஷேசம் முடிந்த பிறகு பெருமாளின் அலங்காரம் கலைக்கப்பட்டு அவருக்க்ச் சாத்தியிருந்த விலையுயர்ந்த ஆபரணங்களை தானத்தார் முன்னிலையில் கோயில் கருவூலத்தில் வைத்து பூட்டிய பிறகு அந்த ஊருக்குப் பயணமானேன். "நான் அந்த கிராமத்திற்கு சென்ற பொழுது அந்தி சாய்ந்துகொண்டு இருந்தது. ஒரு வகையாக பல தோட்டங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டு இருந்த பத்து பதினைந்து கூரை வீடுகளில் அந்த மூதாட்டியின் வீட்டை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த ஊரில் மயான அமைதி நிலவியது. ஒரு கூக்குரல் கேட்டு அந்த வீட்டை உற்றுப் பார்த்த பொழுது அந்தக் கிழவி தனது மகனின் பினத்தருகில் அமர்ந்து கண்ணிர்விட்டு கதறிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும். இயா, என் மகன் போய்விட்டான். எனக்கு இனிமேல் யார் இருக்கிறார்கள்.....? இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கதறினாள். சிறிது நேரம் அந்த பரிதாபக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த ஊர் பெரிய தனக்காரர் வங்கார்.