பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 39 "இந்தா கிழவி வீணாக ஏன் அழுது கொண்டு இருக்கிறாய்? உனது மகனின் அடக்கத்திற்கு ஏற்பாடு .. այաՎ வேண்டும். நீயும் உனது பேத்தியும் இங்கிருந்து புறப்படுங்கள். அவர் சொன்னபொழுதுதான் அந்த கிழவியின் பேத்தி ஒரு பழைய சேலைக்குள் கருண்டு கிடந்ததைக் கவனித்தேன். வட்ட முகம் குறுகுறுப்பான கண்கள். கோதிவிடப்படாத தலைமுடி, சிற்றாடையும் சட்டையும் அணிந்திருந்த அந்த இந்து வயதுச் சிறுமி பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். வறுமையின் கொடுமை அவளது குறுகுறுப்பான கண்ணில் குழிவிழச் செய்து இருந்தது. அங்கு நிகழ்ந்துள்ள கோர நாடகத்தினால் சிறிதும் பாதிக்கப்படாத பார்வை. "இது இவர்கள் வீடு இல்லையா" என்று அந்த பெரியவரிடம் கேட்டேன். அதற்குள் "எங்களுக்கு ஏது வீடு" என்று திரும்பத்திரும்ப சொன்னவள் பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் சாய்ந்து விட்டாள். அவனது கையை பிடித்து நாடி பார்த்தபொழுது எந்தச் சலனமும் இல்லை. அவள் இறந்துவிட்டாள். நான் அந்தப் பெரியவரிடம் அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் வளர்ப்பது பற்றிக் கேட்டேன். தன்னால் எப்படி வளர்க்க முடியும் என்று சொல்லி கையை விரித்துவிட்டார். பெருமாள் விட்ட வழி என்று அந்த பெண் குழந்தையைத் துாக்கி எனது தோளில் சுமந்தவாறு ஊருக்கு திரும்பி வந்தேன்." "இவளை நானே வளர்த்தேன். எனது பெரிய தாயாரின் பெயர் முக்தாலம்மாள் என்பதை அவளுக்குச் சூட் டினேன். எனக்குத் தெரிந்த கல்வியையும் அவளுக்குக் கற்பித்தேன். அவளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பில் முனைந்திருந்ததால் எனக்கு திருமணம் பற்றிய கவலையே ஏற்படவில்லை. இப்பொழுது அவள் இருபத்து இரண்டு வயதுப் பெண். இருவரும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்."