பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எஸ். எம். கமால் "ஆமாம், உங்களது வாழ்க்கையில் திருமணம் இல்லாமல் போய்விட்டது. இவ்வளவும் செய்த நீங்கள், இந்தக் குழந்தைக்கு ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை" கன்னிவாடி நாயக்கர் கேட்டார். "அந்தக் கடமையையும் அவளுக்கு நிறைவேற்றி வைக்க ஆசைதான். முயற்சித்தேன். அவள் கண்டிப்பாக மறுத்துட்டாள். அவளுக்காக எனது வாழ்க்கையை நான் தியாகம் செய்து இருக்கும் பொழுது, எனக்குத் தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்டு திருமண சிந்தனையை துறக்க முடிவு செய்துவிட்டாள். அப்புறம் நான் என்ன செய்ய முடியும் எனது வழித்தடத்தில் அவள்..." என்று சொல்லி சற்று புன்னகை செய்தார். "ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில விசித்திரமான திருப்பங்களை இறைவன் ஏற்படுத்திவிடுகிறான்" என்று சொல்லியவாறு மன்னர் கொண்டம நாயுடுவின் கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார். குமாரத் தேவன் வந்து பணிந்து நின்றான். மதுரை மன்னரது அஞ்சல் சேவகர் காத்திருக்கிறார் என்று மன்னரிடம் சொன்னான். அப்பொழுது, காலையில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு கொண்டம நாயுடு கோயிலுக்குச் சென்றுவிட்டார். மதுரையில் இருந்து வந்த திருமுகத்தை சேதுபதி மன்னரிடமிருந்து பெற்று படித்த கன்னிவாடி பாளையக்காரர் முகத்தில் மகிழ்ச்சி தோன்றி மறைந்தது. "பதில் அனுப்பிவிடலாம்"