பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 44 கைத்திறனையெல்லாம் அந்த கோட்டைவாசல் முகப்பிலும், பந்தலிலும் தொங்கவிடப்பட்டிருந்த தொங்கு சேலைகளிலும் நெட்டியிலான பலவித வண்ண பொம்மைகளிலும் காட்டியிருந்தனரி வண்ணக் கோலங்கள், மனத்தைக் கவர்ந்து இழுக்கும் சித்திரங்கள், மதுரை நாயக்க மன்னரது படைகளும், மறவர் சீமைப் படைகளும், கன்னடியரைத் தாக்கி அழித்த நிகழ்ச்சிகளின் மறு பதிப்பு போன்ற உயிர் ஒவியங்கள். மதுரை மன்னரும், சேதுபதி மன்னரும் அன்புடன் சந்தித்து உரையாடுதல், மதுரை மன்னருக்கு ாதிராக கலகம் செய்த எட்டையபுரம் பாளையக்காரரை விலங்கிட்டு சேதுபதி மன்னர் திருமலைநாயக்கர் அவைக்கு கொண்டு வருதல். வெளிநாட்டு பாதிரியார்கள் திருமலை மன்னரைப் பேட்டி காணுதல், மதுரையில் நவராத்திரி விழா, போன்ற வரலாற்றுக் காட்சிகளும் ஆங்காங்கு இடம் பெற்று இருந்தன. பந்தல் கால்களிலும், பந்தல் முகப்புகளிலும், கோட்டை வாசலிலும், ஏழு அடி உயர சோழவந்தான் வாழைமரங்கள், குலைகளுடன் தென்னம்பாளைகள், பனை நுங்குகளுடன் குலைகள், வாழைத்தார்கள், ஒய்யாரமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. பந்தல்களின் ஒவியச் சேலைகள், அந்தக் காலை இளங்காற்றில் மெதுவாக அசையும் பொழுது, அதில் திட்டபட்டிருந்த மனிதர். விலங்குகள், சித்திரங்கள் ஆகியன உண்மையான உயிர் பெற்றவைகள் போன்ற பிரமையைத் தந்தன. கோட்டை வாசலுக்கு மேற்கே அமைந்துள்ள வாத்திய மண்டபத்தில் இந்த மண்டபம் நவபத்கானா வழங்கப்பட்டது. இருந்து வாத்திய இசை, குழு இசையாக ஒலித்தன. சற்று நேரத்தில் கோட்டைவாயில் அரங்கத்தில் இருந்தும் அந்த வாத்திய ஒலியும் கேட்டது. வடக்கே தல்லாகுளம் மைதானத்தில் தண்டு இறங்கி