பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எஸ். எம். கமால் இருந்த நாயக்க மன்னரதும் சேதுபதி மன்னரதுமான படைகளின் முதல் அணி, பெரிய பெரிய யானைகள், அழகான குதிரைகள், ஒன்றன் பின் ஒன்றாக கோட்டை வாயில் வழி கோட்டைக்குள் புகுந்தன. அடுத்து நீண்ட ஈட்டிகளைப் பிடித்த வீரர்கள் அணிகள், வாள்கள் தாங்கிய வீரர்கள் அணிகள், பாசறைகளில் தங்கி இருக்கும் வீரர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டச் செய்த பாடகர்கள், நடனக்காரர்கள், மாயாஜால மகேந்திர ஜால வேடிக்கைகள் நிகழ்த்தும் விப்ர நாராயணர்கள், மோடி வித்தைக்காரர்கள், கழைக்கூத்தாடிகள் இவைகளைத் தொடர்ந்து மெய்க்காவல் அணி, அவர்களை அடுத்து மதுரைக் கோட்டைத் தளபதியும், கன்னிவாடி நாயக்கரும், தங்களது குதிரைகளில் இருபுறமும் அமர்ந்து வர, நடுவில் அழகிய வெள்ளை நிற அரபு நாட்டு பஞ்ச கல்யாணிக் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வந்தார் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கோட்டை வாசல் முகப்பில் ஆரத்திப் பொருட்களுடன் கூடி நின்ற சுமங்கலிகள் சேதுபதி மன்னருக்கு குதிரை முன் நின்று ஆரத்தி சுற்றவும், அங்கு திரளாகக் கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வாசலில் குதிரையில் அமர்ந்தவாறு காத்து நின்ற மதுரை நாயக்கரது பிரதானி தனது வாளை உருவி நெஞ்சுக்கு நேராகப் பிடித்தவாறு மிகுந்த பணிவுடன் சேதுபதி மன்னருக்கு மரியாதை செலுத்திவிட்டு, மன்னருக்கு முன்னால் சென்று நாயக்க மன்னரது அரண்மனைக்கு வழிநடத்திச் சென்றார். வழியில் அரண்மனை வாசலுக்கு அருகில் இருந்த வாத்திய மண்டபம் அருகே, பிரதானி தமது குதிரையைவிட்டு இறங்கி, சேதுபதி மன்னர் குதிரையைவிட்டு இறங்குவதற் உதவ, அவரது குதிரை அருகே போய் நின்றார். மன்னரும், கன்னிவாடி நாயக்கரும் குதிரைகளில் இருந்து இறங்கியவுடன், அரண்மனை முகப்பில் இருந்து கொலு மண்டப படிக்கட்டுகள் வரை விரிக்கப்பட்டு இருந்த சிவப்பு இரத்தினக் கம்பளத்தில் மூவரும்