பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 45 நடந்து சென்றனர். கொலு மண்டபத்தில் பொன்னாலான சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த திருமலை நாயக்கரும் தடிது கரங்களை நெஞ்சிற்கு நேரே கூப்பியவாறு சேதுபதி மன்னருக்கு வணக்கம் செலுத்தினர். "மகாராஜா நம # ாரம்" உடல் நலிவினால் மிகவும் சோர்ந்து இருந்து நாயக்க "வாருங்கள் சேதுபதி மன்னரே கத்திரி நாயக்கரே! இப்படி அமருங்கள்" பக்கத்தில் இருந்த இருக்கைகளை கட்டிக் காண்பித்தார். அப்பொழுது அவையில் இருந்த அலுவலர்களும், பாளையக்காரர்களும் எழுந்து நின்று, "சேதுபதி மன்னர் வாழ்க" என முழங்கினர். சேதுபதி மன்னர் மட்டும் மதுரை மன்னர் அருகில் இருந்த அழகிய இருக்கையில் அமர்ந்து மதுரை மன்னரது உடல் நலம் விசாரித்தார். "சேதுபதி மன்னரே தாங்கள் இப்பொழுது இந்த மதுரை மண்டலத்திற்கு தேடித்தந்துள்ள வெற்றியை நானும் எனது குடிமக்களும் மறக்கவே மாட்டோம். எனது உடல் நலிவு ஒடி மறைந்துவிட்டது. ஏற்கனவே படுத்த படுக்கையாக இருந்த நான் புதிய தெம்புடன் இப்பொழுது அமர்ந்து இருக்கிறேன் பார்த்தீர்களா?" "மிக்க மகிழ்ச்சி மகாராஜா எல்லாம் இறைவனது நாட்டம்" என்று சொல்லிய சேதுபதி மன்னர்,