பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 GΙΦΙΓΟ. @ΤΤ.Π., ΒΙ.ΠΠΙΦΝ) "தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. மதுரையும், இராமநாதபுரமும் எப்பொழுதும் இணைந்தே இருந்து வந்துள்ளன. மதுரைச் சீமையில் அரசியல் பாதிக்கப்பட்டால் அது மறவர் சீமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மதுரை மன்னருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை களைவதற்கு என்னால் இயன்றதைச் செய்தேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று சொல்லி முடித்தார். "மன்னரே! தங்களது நம்பிக்கை வீண்போகாது. தங்களது தெளிவான அரசியல் முடிவு தென்னக வரலாற்றில் சிறப்பான இடம்பெறும்." என்று மகிழ்ச்சியுடன் கூறிய திருமை நாயக்கர், I. -- † s # # - = இப்பொழுது தாங்கள் விருந்து மண்டபம் சென்று ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள். மதிய விருந்தின் பொழுது மீண்டும் அளவளாவி மகிழ்வோம்." திருமலை மன்னர் சொன்னதும் அவரது ராயசம் வந்து சேதுபதி மன்னர் முன் வணங்கி நின்றார். திருமலை மன்னர் எழுந்து சேதுபதி மன்னரை விருந்து மண்டபத்திற்கு அனுப்பப்பட்டு சொர்க்கவிலாசம் அரண்மனை சென்றதும், கொலு மண்டபத்தில் இருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

  • * *