பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 எஸ். எம். கமால் வர சமையல் கட்டிற்குச் சென்றான் குமாரத் தேவன். அந்த அறையில் இருந்த அழகிய இருக்கை ஒன்றிலே சேதுபதி மன்னர் அமர்ந்த பொழுது எதிர்ச்சுவர் அருகில் இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் மன்னரது முழு உருவம் தெளிவாக பிரதிபளிப்பதைப் பார்த்தார். சேதுபதி மன்னர் அவரது உருவத்தை கண்ணாடியில் பிரதிபலித்ததை நம்ப முடியவில்லை. கடந்த மூன்று வார காலத்தில் கன்னடப் படையை வெற்றிகொண்ட மகிழ்ச்சி அவரது கண்கள், கன்னங்களில் அவரே அறியாதவாறு அழகையும் பொலிவையும் மெருகூட்டி இருந்தன. குமாரத் தேவனுடன் வந்த அரண்மனை பணியாட்கள் சிற்றுண்டி தட்டுகளை எடுத்து வந்து சாப்பாட்டு அறையில் வைத்துவிட்டு மன்னரை வணங்கிச் சென்றனர். சிற்றுண்டிகளைச் சுவைத்த பிறகு மன்னர் படுக்கை அறைக்குள் சென்றார். ஏதோ சிந்தித்த வண்ணம் அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்தார். பின்னர் மண்டபத்தின் முதல் தளத்திற்குச் சென்று மதுரை மாநகரை உற்றுப் பார்த்தார். கிழக்கே திருமலை மன்னரது சொர்க்கவிலாசம் அரண்மனை. மேற்கே மதுரைக் கோட்டையின் உயரமான மேற்குவாசல். இவைகளுக்கு இடையே வானுயர்ந்து கம்பீரமாகக் கட்சியளிக்கும் மதுரை திருக்கோயிலின் ராஜகோபுரங்கள். கருவறைக் கோபுரங்கள், கந்தனை அனைவர் அமர்ந்து கற்ற கலைதெரி கழகங்கள், கற்றதையும் கேட்டதையும் கற்பகச் சுறவையில் கலந்த காவியங்கள் அரங்கேறிய தமிழ்ச் சங்கம். அவைகளுக்கு அப்பால் வடக்கில் வைகை ஆற்றில் ஆற்றுப் படுகை, அதற்கும் அப்பால் பகமை பொழியும் வயல்கள், செடி, கொடிகள், மரங்கள் முதலியன.