பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் || || மதுரைக் கோயிலின் உச்சிக் கால பூசைக்கான அா மணிகளின் கம்பீரமான ஒலி விட்டு விட்டு மென்மையாக ஒலிப்பது கேட்டது. மன்னர் மெதுவாகப் படிக்கட்டுகளை கடந்து தமது அறைக்குள் வந்து அமர்ந்தார். குமாரத் தேவன் ஒரு வெள்ளித் தட்டில் வைத்து எடுத்து வந்த ஒரு செம்பை நீட்டினான். "இது மோா தானே ஒரு விதமான இனிய சுவையுடன் இருக்கிறது" "மோரில் இலேசாக நன்னாரி வேர் வடிர்பத் கலந்து இருக்கிறார்கள் மகாராஜா" குமாரத் தேவன் பதில் சொன்னான். "உண்மைதான். நன்றாக இருக்கிறது" "இன்னும் ஒரு நாழிகை நேரம் கழித்து பிரதானி வருவாராம். மதிய விருந்திற்கு அழைத்துச் செல்ல ராயசம் வந்து இப்பொழுது சொல்லிவிட்டு சென்றார்." தொடர்ந்து சொன்னான் குமாரத் தேவன்.

  • * *