பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 51 அவரை சிறப்பிக்கும் வகையில் மதுரை மண்டலத்தில் உள்ள எழுபத்து இரண்டு பாளையக்காரர்கள். வடக்கே தாராபுரத்திலிருந்து தெற்கே களக்காடு வரையிலான அனைத்து பாளையக்காரர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் அவரவர்களுக்குரிய தொன்மையான ஆடைகளைப் புனைந்தும், அணிமணிகளை அணிந்தும் அங்கு வந்து இருந்தது மிகவும் அரியதொரு காட்சியாக அமைந்து இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களது முன்னோர்களையும் அவர்களது பராக்கிரமச் செயல்களையும் கட்டியக்காரர் சொல்லி சேதுபதி மன்னருக்கு அறிமுகப்படுத்தியது. இன்னும் சிறப்புடையதாக இருந்தது. அடுத்து விருந்து பரிமாரப்பட்டது. எத்தனையோ விதமான வர்க்கான்னங்கள் கற்கண்டுச் சோறு, புளிச்சோறு, நெய்ச்சோறு, சாம்பார் சோறு, தயிர்ச் சோறு, இவைகளுக்குப் பொருத்தமான கூட்டு, கறி, பொறியல், வருவல், பாயாசம், பழங்கள், பானகங்கள், யாருமே மறக்க முடியாத பெருவிருந்து. விருந்துணவின் வாசனைக்கு மேலாக பலவித நறுமணங்களும் அங்கு பரவி இனிய சூழலை ஏற்படுத்தியது. விருந்து மண்டபத்தை அடுத்து கேளிக்கை அரங்கில் ராஜநர்த்தகி கலாதேவி அளித்த நாட்டிய விருந்தும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளின் நாளாக சேதுபதி மன்னரது சிந்தனையில் பதிவு பெற்றது. என்றாலும், மன்னரது உள்மனத்தில் இராமநாதபுரம் அரண்மனையும் சேது.கங்கை நாச்சியாரின் நினைவுகளும் மென்மையாக நிழலாடின