பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 எஸ். எம். கமால் தெற்குக்கடலை கவனித்துக் கொண்டிருந்தார், சேதுபதி மன்னர். வங்கக்கடலின் அந்த விரிந்த பரப்பில் விளையாடிக்கொண்டிருந்த விரிதிரைகள் ஒன்றன்பின் சின்றாக வந்துகரையின் குறு மணலைத் தொட்டுத் திரும்பிச் செல்லும் சிறுபிள்ளை விளையாட்டு அவரது சிந்தனையை ஈர்த்தது. கடல் பரப்பில் எழுந்து அழகாக உருண்டோடி வந்து, காதல் கிழத்தியை கனவில் ஆர்வமுடன் அனைத்துத் தழுவுகின்ற நாயகனைப் போன்று கடற்கரையைப் பரவலாகத் தழுவிவிட்டு பின்வாங்கி கடல், நீரில் மறைந்துவிடும் அலைகள், அவைகள் கொப்பளித்த துரைகள், அவைகளின் பின்னல் ஆடை போல காட்சியளித்த நுாற்றுக்கணக்கான குமிழ்கள், ஆம் இவையெல்லாம் நொடி நேரத்தில் எங்கே ஒளிந்து மறைந்தன? மன்னரது மனத்திரையிலும் எத்தனையோ சிந்தனைக் குமிழ்கள். இரண்டு மாதகால இடைவெளியில் தான் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் LI) لتيeaته وه பேராசர் திருமலை நாயக்கரது உருக்கமாக அழைப்பு. பஆையிரம் மறவர்களைத் திரட்டி மதுரை சென்றது, கன்னட படைகளை துவம்சம் செய்து வெற்றி வாகை சூடியது, திருமலை நாயக்கர் அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள், பரிசில்கள், விருந்துகள், ളുഞ്ഞഖജ്ഞ எல்லாம் மேலாக நாயக்கர் சமஸ்தான ராஜ நர்த்தகி கலாதேவி மீது ஏற்பட்ட காதல், சாதாரண காதல் அல்ல, கலைக்காதல், இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் மன்னரது மனத்தில் ஆழத்தில் உருண்டு திரண்டு கனிந்து கொண்டு இருந்து சி- + + + + + - H = - - "மகாராஜா.