பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 55 - *- கண்ணாடியிலே சீனப்பட்டை வைத்து அழுத்தினால் ஏற்படுவது போன்ற மென்மையான இனிய குரல். சுந்தரத் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டதாலோ என்னவோ அந்த உச்சரிப்பில் ஒரு உருக்கம். அதிலே, கலந்து வந்த பிணிவு, மன்னரது கவனத்தை ஈர்த்தது. மீண்டும், "மகாராஜா.... தங்களது அடிமை" "கலாதேவி" மன்னரது குரலில் மகிழ்ச்சி இழைகள் இணைந்து எக்காளமிட்டன. "கடந்த பத்து நாட்களாக உனது நடனத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பினை எனக்கு மதுரை மன்னர் அவர்கள். அளித்துள்ளார். கலைவானியின் பூர்ண அருளும் உனக்கு உள்ளது..... -- 'தெய்வீகக் கலையான நாட்டியத்தை, நான் கற்றுணர்ந்தவள் என்ற நிலையில் பரதத்தை நீயும் மிகவும் சிறப்பாகக் கற்றுத்தேர்ந்திருக்கிறாய் என்பது எனது முடிவு. உனக்கு எனது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்." சேதுபதி மன்னர் சொன்னார். "எல்லாம் சமூகத்தின் ஆசிர்வாதம் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற வாக்கு போல, நாட்டியக் கலை வல்லுநரான, பரதநாடகப் பிரவீணரான, தங்களது பாராட்டைப்பெறுவதற்கு நான் முந்தைய ஜென்மத்தில் என்ன தவம் செய்தேனோ" கலா தேவியின் கனிவான குரல். "பேஷ் மிக நன்றாகப் பேசுகிறாயே! 'மதுரை மன்னர் உன்னை ஆந்திர நாட்டுக் கலைமணி என்று மட்டும்தான் எனக்கு