பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் I "எல்லாம் மகா சமுகத்தின் ஆசிர்வாதம்" "மன்னரது அவையில் நீ ஆடிய குச்சுப்புடி நடனம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆதலால் எனது பாராட்டைத் தெரிவிக்கவே இங்கு உன்னை அழைத்தேன்" "அந்த நிகழ்ச்சியே தங்களது வெற்றிச் சிறப்பைப் பாராட்டுவதற்குத் தானே நடந்தது. எனக்குத் தெரிந்தவரை மதுரை நாயக்க மன்னர் சேதுபதியாகிய தங்களைத் தவிர வேறு யாருக்கும் இத்தகைய பாராட்டு நிகழ்ச்சியினை நடத்தியதாக வரலாறு இல்லை. திருமலை நாயக்க இயன் தங்களிடம் கொண்டுள்ள அன்பிற்கு அளவே இல்லை என்பதை அவர் தங்களுக்கு வழங்கிய விருந்துகளும் பரிசில்களுமே சான்றாகும். அதனைக் கூடியிருந்த பொது மக்களும் பாளையக்கார்ர்களும் பார்த்து பிரமித்துப் போயினர். ஆனால் அவர்களைவிட மிகவும் மகிழ்ச்சியுற்றவள் நான்தான்." "அதற்கு ஏதாவது சிறப்பான காரணம்...? "மகாராஜா தாங்கள் மன்னர் மட்டுமல்ல. நாட்டியக்கலைஞர். தங்களுக்கு கிடைத்த மகத்தான பாராட்டும், பரிசில்களும், நாட்டிய உலகிற்கே கிடைத்த நற்பேராக நினைக்கிறேன். இதுவரை தமிழக வரலாற்றில் பல்லவ மன்னர் மகேந்திரர் ஒருவர் மட்டும்தான், இசையிலும் கூத்திலும் இணையற்றவராக இருந்தார் என்பதை அறிகிறோம். இப்பொழுது எம்மிடையே இருக்கும் நாட்டியக் கலைஞர், மன்னர் சேதுபதி மகாராஜா மட்டும்தானே!" கலாதேவி பேச்சை முடித்தாள்.'