பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III பதிப்புரை தமிழ் இலக்கிய வளர்ச்சியின் ஒரு பகுதியாக அமைந்து விளங்குவது புதினங்கள். இந்தப் புதின வகையில் வரலாற்றுப் பின்னணியைப் புகுத்தி பெரும் வெற்றி கண்டவர் அமரர் கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள், அவரது மறைவிற்குப் பிறகு சில எழுத்தாளர்கள் தமிழக வரலாற்றுப் பின்னணியில் சில படைப்புகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தும் இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு சீராகவில்லை. என்றாலும், சேது நாட்டு வரலாற்றுச் செம்மலும், சேவா ரத்னா விருதாளருமான டாக்டர். எஸ்.எம். கமால் அவர்கள் இந்தத் துறைக்கு தமது பங்களிப்பை 1996ல் தனது கன்னி முயற்சியாக "சேதுபதியின் காதலி" என்ற ஒரு தரமான வரலாற்றுப் புதினத்தை வழங்கினார். தமிழக அரசு இந்த நூ லுக்கு 15-01-1997ல் சிறந்த புதினத்திற்கான பரிசை வழங்கி சிறப்பித்தது. இந்த ஊக்குவிப்பினை முன்னோடியாகக் கொண்டு, ஆசிரியர் தமது இரண்டாவது வரலாற்றுப் புதினமான "சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும்" என்ற இந்த நூலைப் படைத்துள்ளார். இந்த நூலும் வரலாற்றுப் புதின வரிசையில் சிறப்பிடத்தையும் வாசகர்களது பாராட்டுக்களையும் தமிழக அரசின் ஊக்குவிப்பையும் பெற்று விளங்கும் என்ற நம்பிக்கையில் இதனை எங்களது வெளியீடாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 'I()- I 3-1998 சர்மிளா பதிப்பகத்தார் இராமநாதபுரம்