பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 59 "குமாரத்தேவா" மன்னர் பணியானை அழைத்தார். சில வினாடிகளில் ஒரு வெள்ளித் தட்டினைக் கொண்டுவந்து மன்னர் முன்னர் வைத்தான் அவன். அந்த தட்டில் ஒரு பட்டுச் சேலையும் அதன்மீது அழகிய பொன்னலான காகமாலை ஒன்றும் பூச்சரம் ஒன்றும் இருந்தது. மன்னர் அதனை கலாதேவியிடம் நீட்டினார்,"எங்களது சமஸ்தான அன்பளிப்பு", என்று சொல்லியவாறு. அதனை பெற்றுக் கொண்ட பொழுது கலாதேவியின் கண்களும் வாயும் மகிழ்ச்சியால் விரிந்து மலர்ந்தன. "மகாராஜா தன்யளானேன்" என்று சொல்லியவாறு அவள் சாஷ்டங்கமாக மன்னரை விழுந்து வணங்கி விடை பெற்றுச் சென்றாள். அவள் செல்வதையே நோக்கியவாறு சிலநொடிகள் அமர்ந்து இருந்தார் மன்னர். 米米米