பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 61 | - = = o உம்... என்ன செய்தி!" - "மகாராஜா கோயில் குருக்கள் எந்து இருக்கிறார்" "அவரை சவுக்கையில் இருக்கச்சொல்"மன்னர் பதில் "உத்தரவு" கார்வார் கீழே சென்றார். சேதுபதி மன்னர் எழுந்து உடைகளை கண்ணாடியில் சரி பார்த்து அணிந்து கொண்டு, படிக்கட்டு வழியில் மெதுவாக கீழே இறங்கி வந்தார். மன்னர் வருவதைக் கண்ட கோயில் ஸ்தானிகமும், குருக்களும், பிரதானியும், மன்னருக்கு வணக்கம் செலுத்தினர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த மன்னர், "நவராத்திரி, விழா பட்டியல் தயாரிக்கப் பட்டுவிட்டதா?" "ஆம் மகாராஜா பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுககுத தேவையான அனைத்துப் பொருட்களின் பட்டியலை பிரதானி அவட்களிடம் கொடுத்து இருக்கிறேன்." "சரி. அவைகளை அவர் சேகரித்து வைத்துவிடுவார். தங்களுக்கு உற்சவ காலத்தில் உதவ அத்யாயன பட்டர்கள் வேண்டுமல்லவா? மதுரையில் இருந்து வரவழைக்கலாமா?" "தேவையில்லை மகாராஜா நமது இராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலில் இருந்து அழைத்துக் கொள்ளலாம்"