பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 எஸ். எம். கமால் "பிரதானியாரே! நமது நவராத்திரி விழா மிகச் சிறப்பாக அமைந்து விட்டதாக சில விருந்தினர்கள் என்னிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டு வருகிறார்களா? அவர்களில் எத்தனை பேர் தங்கி உள்ளனர்?" மன்னர் கேட்டார். அவரது குரலில் இருந்த கரகரப்பு. கடந்த பத்து நாட்கள் நேரம் தவறி விழித்து இருந்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தது. "மகாராஜா இன்று காலைவரை, பெரும்பாலான பாளையக்காரர்களும், புலவர்களும் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் அரண்மனை மரியாதைகளுடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர். இரு கவிராயர்களும் மதுரை சமஸ்தான ராஜ நர்த்தகியும் மட்டும் தங்கி இருக்கின்றனர். அவர்கள் நாளைக் காலையில் புறப்படுவதாகச் சொன்னார்கள்." "நாட்டு நடப்பு பற்றிய செய்தி ஏதும் உள்ளதா?" "யாழ்ப்பானத்தில் உள்ள டச்சுநாட்டு ஆளுநர் இன்னும் பத்துநாட்களில் பாம்பன் முத்துச் சிலாபம் பற்றி மகாராஜாவுடன் பேசுவதற்கு வர இருக்கிறாராம். நமது மறு மொழிக்காக அவரது ஆராய்ச்சி நமது அலுவலகத்தில் காத்து இருக்கிறார்." "நமது இணக்கத்தை தெரிவித்து பதில் அனுப்பி வையுங்கள். பாம்பன் கோட்டையில் டச்சுநாட்டு ஆளுநரைச் சந்திக்கலாம். அத்துடன் முத்துச் சலாபத்தின் வழக்கம் போல முதல் நாள் முத்துக்கள் நமக்கு உரியன என்பதையும் நினைவுபடுத்தி எழுதுங்கள்." "இன்னொரு முக்கியமான செய்தி" என்று மன்னரிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்த அரண்மனை பணியாளர்களை