பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 65 பார்த்தார் பிரதானி. குறிப்பையறிந்த அவர்களும் அங்கிருந்து அகன்றனர். மன்னருடன் அப்பொழுது பிரதானி மட்டுமே இருந்தார். பிரதானி தொடர்ந்து சொன்னார். "நேற்று பிற்பகலில் அரண்மனையிலிருந்து புறப்பட்ட தசரா விழாபவனி வன்னிமைதானத்தை அடைந்தபொழுது, இதுவரை இராமநாதபுரம் கண்டிராத பெருங்கட்டம், அங்கே திரண்டு இருந்தது. உள்ளூர் கோயிலில் இருந்து எடுத்து வரப்பெற்ற உற்சவ மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நமது ராஜராஜேஸ்வரி அம்மனது சந்நிதானத்தில் வருசையாக நிறுத்தப்பட்டவுடன், மகாராஜா அவர்கள் ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசித்துவிட்டு, அம்மனது கொற்ற வில்லைப் பெற்று அம்மனது சார்பாக வன்னிமரமாக நின்ற மகிஷாசுரனைக் குறிபார்த்த நேரத்தில் கடல் போன்ற அந்தக் கூட்டத்தில் கட்டுப்பாடும், அமைதியும் நிலவின. முதல் அம்பு குறி தவறாமல் வன்னி மரத்தில் பாய்ந்து குத்தி நின்றது. மகாராஜா அவர்கள் அடுத்த அம்பை எடுத்து நானேற்றும் பொழுது மைதானத்தின் வடகிழக்கு மூலையில் சிறு சலசலப்பு இருப்பது தெரிந்தது. நமது வீரர்கள் கூட்டத்தினரை விலக்கி அங்கு செல்வதற்குள் அங்கே குடிபோதையில் உளறியவாறு தள்ளாடிக்கொண்டிருந்த ஒருவனை கூட்டத்தினர் நையப்புடைத்துவிட்டனர். சுயநிலை பெற்ற அவன் தனது காயங்களைப் பார்த்து பயந்து வடக்கே உள்ள பேரா கண்மாய் உள்வாய்க்குள் ஒடிவிட்டான். விஷயம் தெரிந்த நமது வீரர்கள் அவனைப் பின் தொடர்ந்ததில் அவன் தப்பி ஓடும் பொழுது அவன் தவறவிட்ட சிறிய துணி முடிச்சு ஒன்றை மட்டும் எடுத்து வந்து என்னிடம் ஒப்படைத்தனர். மாலையில் வன்னி மைதானத்திலிருந்து அரண்மனை திரும்பி வந்த பிறகு பிரித்துப் பார்த்தேன். அதில் நூற்று.இம்பது பொற்காசுகளும் ஒரு சிறிய கட்டாரியும் இருந்தன. மகாராஜா அவர்கள் அந்தப் புரத்துக்குள் சென்றுவிட்டதால் சமுகத்திற்கு நேற்று தெரிவிக்க இயலவில்லை. இதோ அந்த துணி முடிச்சு" என்று சொல்லிய பிரதானி அதனை பிரித்து மன்னர் முன் வைத்தார்.