பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எஸ். எம். கமால் I = - II - == - = 'என்ன கட்டாரியா?" என்று சற்று வியப்புடன் சொன்ன மன்னர் அதனை எடுத்து நன்கு உற்று கவனித்தார். "திருவிழாவிற்கு வந்தவன் கட்டாரியுடன் வந்து இருக்கிறான். இந்த பொற்காககளும் நமது நாட்டு அச்சு சாலையில் தயாரிக்கப்பட்டவை அல்ல. அயல் நாட்டுக் காசுகள்....உம் இந்த முடிச்சுத் துணியும் நமது நாடட்டு நெசவு அல்ல" மன்னர் கருத்து தெரிவித்தார். பிரதானியின் சிந்தனையிலும் மன்னரது கணிப்பு எதிரொலித்தது. திருவிழாவிற்கு வந்தவன் கட்டாரியுடன் ஏன் வரவேண்டும்? கொலை நோக்கம் எதுவும் இருந்து இருக்குமா? அப்படியானால் அவன் குடி போதையில் ஏன் இருந்தான் அயல் நாட்டு நாணயங்களை வைத்து இருந்த அவன் அயல்நாட்டுக்காரனா அல்லது இந்த நாட்டுக் குடிமகனா இந்த வினாக்களை தமக்குள் எழுப்பிக் கொண்ட பிரதானி உரிய விளக்கம் பெற இயலாமல் தவித்தார். அப்பொழுது, "மூன்று மாதங்களுக்கு முன்னர் மதுரையில் இருந்து திரும்பியபொழுது, ஒரு கட்டாரியைக் கொடுத்து நமது கருவூலத்தில் வைத்து இருக்குமாறு சொன்னேன் அல்லவா? அதனை கொண்டு வாருங்கள்" என்று ஆணையிட்ட மன்னர் பின்னர் மெளனமாக இருந்தார். பிரதானி, கார்வாரிடம் தகவல் சொல்லி அனுப்பினார். சிறுது நேரத்தில் கார்வார் துணிச்சுருள் ஒன்றை பிரதானியிட:மம் கொண்டுவந்து கொடுத்தார். அதனை பிரித்து, அதனுள் இருந்த கட்டாரியை எடுத்து பிரதானி மன்னரிடம் கொடுத்தார். அதனை இந்தக் கட்டாரியுடன் சரிபார்த்தார். மன்னரது முகத்தில் தோன்றிய முகபாவங்களில் இருந்து மன்னருக்கு மன நிறைவு ஏற்பட்டது என்பதை பிரதானி உணர்ந்தார்.