பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 67 இரண்டு கட்டாரிகளையும் பிரதானியிடம் கொடுத்து "இவைகளை சரிபாகங்கள்" என்றார் மன்னர். "இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. இரண்டும் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டவை" பிரதானியின் பதில், "சரியாகச் சொன்னிர்கள். இவைகளைப் பத்திரப் படுத்தி வையுங்கள். இது பற்றி பின்னர் பேசலாம்." "உத்திரவு. எதற்கும் உளவுப் பிரவை உஷார்படுத்தி வைக்கிறேன். கோட்டைக் காவலிலும் கடுத்தம் ஏற்படும்படி பார்த்துக்கொள்கிறேன்." மன்னரது மனநிலையைப் புரிந்த பிரதானியின் பதில் இது. பிறகு மன்னரிடம் விடைபெற்றுச் சென்றார் பிரதானி. ஆனால் சேதுபதி மன்னர் தொடர்ந்து சிந்தனையில் அங்கேயே ஆழ்ந்து அமர்ந்து இருந்தார். தம்மைக் கொல்ல இரண்டாவது முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தபோது அவருக்குப் பயம் ஏற்படாவிட்டாலும், தமது ஆட்சியின் அயக்கத்தில் கண்காணிப்புக் குறைவும், ஆட்சிக்கு எதிராக சதியும் உருவாகி இருப்பதுதான் அவரது உள்ளத்தை மிகவும் அழுத்தியது. மதுரை நாயக்க மன்னர் போன்ற பேரரசர் மதித்து போற்றும் மறவர் சீமையில் அவருக்கு எதிரான் பாழ் செய்யும் உட்பகையா? உட்பகை உருவாக என்ன காரணம்: சேதுபதியின் ஆட்சியில் பொறுக்க முடியாத அநீதி இழைக்கப்பட்டது எப்பொழுது, யாருக்கு, எங்கே?