பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சார்ந்த நன்றி "சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும்" எனற இந்த வரலாற்றுப் புதினம், இப்பொழுது முழுமையான நூலுருவம் பெற்று வாசகர்கரங்களில் தவழத் தொடங்கவிருக்கிறது. கையெழுத்துப் பிரதியாக இருக்கும் பொழுதே இந்தப் புதினப் பக்கங்களை பொறுப்புடன் படித்து, கதையின் போக்கிற்கு இயைந்த கருத்துக்களைப் பரிந்துரைத்த பேராசிரியர் திருமை..அப்துல்சலாம், எம்.ஏ. (தமிழ்த்துறை, சேதுபதி அரசினர் கலைக்கல்லூரி, இராமநாதபுரம்)அவர்களுக்கும் கையெழுத்திப் பிரதிகளை ஆர்வமுடன் படித்து அப்பொழுதைக்கப் பொழுது அழகாக தட்டச்சு செய்து கொடுத்த திரு. சீதாபதி, பி.ஏ., அவர்களுக்கும், மிகக் குறைந்த கால இடைவெளியில் இந்தப் புதினத்தை நூலுரு பெறச் செய்து, அழகிய முறையில் அச்சிட்டு உதவிய இராமநாதபுரம் அன்னை ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையளர் திரு.என். குமார சூரியன் அவர்களுக்கும், அவரது அச்சகப் பணியாளர்களுக்கும், இந்த நூலின் அச்சுப் பிரதியினை முழுமையாகப் படித்து, இந்தப் புதினம் பற்றிய அரிய அணிந்துரையினை வரைந்து உதவிய, பேராசிரியர், டாக்டர் திரு.கோ.விஜயவேணு கோபால் (கல்வெட்டுத் துறை, பிரஞ்சு இந்திய இயல் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி) அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன். காலத்தாற் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்திலும் பெரிது அல்லவா? எஸ்.எம்.கமால் புதினப் புனைவாளர்