பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 எஸ். எம். கமால் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சேதிபதியின் பட்டத்திற்கு உரிமை கொண்ட சிலர் போர்க்கோலம் பூண்டனர். அதுவும் திருமலை நாயக்கரது தலையீட்டில் ஒரு முடிவு பெற்றது. அடுத்து இவ்வளவு காலமும் மறவர் சீமையை அமைதி கொலுவிருந்ததாக எண்ணிக் கொண்டிருந்தது தவறான முடிவா? நெருப்பு இல்லாமல் புகை ஏற்படாதே அந்த விசாலமான கூடத்தில் ஒரு மூலையில் புகைந்துகொண்டிருந்த் மனம்மிக்க சந்தனப்பெட்டியில் இருந்த வந்துகொண்டிருந்த புகை மண்டலச் சுருள் போல, மன்னரது சிந்தனைகளும் அடுக்கடுக்காக வளர்ந்துகொண்டிருந்தன. நன்பகல் பிற்பகலாகி மாலையும மறைந்து கொண்டிருந்ததை மன்னர் உணரவில்லை. நீராவி அரண்மனை மாடங்களில் சிறிய பெரிய லஸ்தர் விளக்குகளில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவத்திகளின் மென்மையான ஒளி வண்ணக் கண்ணாடிச் சட்டங்களை ஊடுருவி வந்து கொண்டிருந்தது. ஆனால் மன்னரது சிந்தனையில் படர்ந்த மையிருட்டை நீக்க அவை பயன்படவில்லை. "சமுகம் உத்திரவு" என்ற கார்வாரின் குரல் மன்னரது சிந்தனையைக் கலைத்தது. மெதுவாக சேதுபதி மன்னர் திரும்பிப் பார்த்தார். "மதுரை சமஸ்த்தான நர்த்தகி அம்மையா:ார் வந்து இருக்கிறார்" தொடர்ந்து கார்வார் தகவல் தெரிவித்தார். அடுத்து, "மகாராஜா நமஸ்காரம்" ராஜநர்த்தகி கலா தேவியின் கனிந்த குரல். மண்டியிட்டு வணங்கி மரியாதை செய்து எழுந்தாள்.