பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 69 "கலாதேவி என்ன இந்த நேரத்தில்" "மகாராஜாவிடம் விடைபெற்றுச் செல்ல வந்துள்ளேன். மகாராணியிடம் இருந்து பிரிந்து வருவதற்கு இவ்வளவு நேரமாகிவிட்டது. எத்தனையோ யுகங்களுக்கு முன்னர் பிரிந்தவர்கள் மீண்டும் கூடியதைப் போன்ற பாசப்பிணைப்பை இந்த இரண்டுவாரப் பழக்கம் ஏற்படுத்திவிட்டது. எல்லாம் நான் செய்த பூர்வ புண்ணியம்தான்" "அடடா மகாராணியாரும், ராஜ நர்த்தகியின் பேச்சில் மயங்கிவிட்டார் போலத் தெரிகிறது" மன்னர் சிரித்துக் கொண்டே சொன்னார். "மகாராணியாரை எனக்கு மகவும் பிடித்துப் போய்விட்டது. மகாராஜா இது மயக்கம் அல்ல. எத்தனையோ பிறவிகளாக எங்களிடம் தொடர்ந்து வந்துள்ள பந்தம் என்றே நினைக்கிறேன். இந்த அரண்மனையில் அவர்களுடன் கழிந்த பதினைந்து நாள் பொழுதும் மறக்க முடியாதவை. அத்துடன் மகாராஜா அவர்களது அன்பு, ஆதரவு..." "அப்புறம் ஏன் இந்த சூழலை விட்டுச் செல்ல வேண்டும்" "தங்களது இந்த அடிமை மதுரை சமஸ்தான சேவகி என்பதை மகாராஜா அறிவீர்கள். ஒருபுறம் கடமை, மறுபுறம் அன்பு பிணைப்பு. இருதலைக் கொல்லி என்று சொல்வார்கள் அல்லவா? அதனை இப்பொழுதுதான் உணருகிறேன்." வருத்தம் தோய்ந்த குரலில் ராஜ நர்த்தகி சொன்னாள். - "நல்லது போய் வரவும். இன்னும் இரண்டு மாதங்