பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 எஸ். எம். கமால் களில் இராமேகவரம் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத் திருப்பணி விழா உள்ளது. அப்பொழுது நாயக்கருக்கு திருமுகம் அனுப்புகிறேன். வரலாம்" என்று கலா தேவியிடம் கூறிய மன்னர் அரண்மனைக் கார்வாரைப் பார்த்து, H o s - * நாளைக் காலையில் இவர்களை மரியாதைகளுடன் மதுரை திரும்ப ஏற்பாடு செய்யவும்" மன்னரின் உத்தரவை கார்வார் தலையணிந்து ஏற்றுக்கொண்டு சென்றார். "சமுகம் உத்தரவு வருகிறேன்" என்று சொல்லி தலை வணங்கி நிமிர்ந்த கலாதேவியின் கண்கள், சேதுபதி மன்னரது கூர்ந்த பார்வையில் பட்டுத் திணறியது. வெட்கம் மேலிட்டவளாக கலாதேவி மிகுந்த அடக்கத்துடன் தலைகுனிந்தவாறு அங்கிருந்து சென்றாள். அதுவரை கலகலப்பாகக் காட்சியளித்த மனனரது சிந்தனையில் மீண்டும் அந்தக் கட்டாரியின் நினைவு தோன்றி அவரை தீவிர சிந்தனையில் நிலைகொள்ளுமாறு செய்தது. மீண்டும்....மீண்டும். விளக்கம் பெற இயலாத அதே வினாக்கள்: கனணாடிப் பாத்திரத்திலிடப்பட்ட பொன் மீன்கள் அந்தக் குறிப்பிட்ட வட்டத்திலேயே சுற்றிச் சுற்றி வருவதைப் போல ஆனால் அதற்கான விடை.... இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள், தோள் உறிக்கப்பட்ட விளாம் பழத்தைப் போல சதியின் விளைவுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படத்தானே வேண்டும். 승