பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எஸ். எம். கமால் "வாருங்கள், இப்படி அமருங்கள். தங்களுக்கு இலை அனுப்பி இருந்தேன். சற்று பொறுமையாக இருக்குமாறு" மன்னர் சொன்னார். "ஆம் மகாராஜா தாங்கள் அறிவுறுத்தியவாறு பொறுமை காக்க முடியவில்லையே! நான் மட்டுமல்ல மறவர் சீமை மக்கஞம்தான்! II "ஆமாம் இப்படித்தான் முன்னரும் சொன்னிர்கள் அதை நம்பி பெரும் படையைச் சேதுபதி சீமைக்கு அனுப்பி வைத்தேன். உயிருக்கும் உடமைக்கும் பெருத்த சேதம். சேதுபதியைச் சிறையில் அடைத்தும் என்ன பிரயோசனம் தாங்கள் சொல்லுகிற அதே மக்கள்தான் பெருங்கிளர்ச்சியை நடத்தினர். வேறு வழியில்லாமல் தளவாய் சேதுபதியை விடுதலை செய்தேன்." "தளவாய் சேதுபதி இப்பொழுது மிகவும் நோய்வாய்ப் -பட்டு உள்ளார். அவருக்குப் பிறகு அவரது தங்கை மகன் சேதுபதியாக வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் அவரது மகளை மணந்த ரெகுநாதத் தேவரின் தம்பி தனுக்காத்த தேவர் சேதுபது பட்டம் கிடைக்க வேண்டும் என்பது இராமநாதபுரம் அந்தப்புரத்தில் உள்ளவர்களது ஆசை." இவ்விதம் அவர்கள் பட்டத்திற்கு முயற்சி செய்யும் பொழுது, சேதுபதி மன்னரது மகனாகிய நான் மட்டும் எப்படிசும்மா இருப்பது தாங்கள்தான் எனக்கு உதவிட வேண்டும்." தம்பித் தேவரது வேண்டுதல். "தாங்கள் சேதுபதியின் மகன் இல்லையென்று யாரால் மறுக்க முடியும் தாங்கள் பட்ட மகிஷியின் மகள் அல்ல என்பதுதான் தங்கள் எதிரிகளின் வாதம். தங்களது தந்தையே தங்களது