பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் . 73 உரிமையை நிலைநாட்ட முன்வரவில்லை. அதனை இப்பொழுது எப்படி நிலைநாட்டுவது என்பதுதான் பிரச்சினை. முயற்சித்துப் பார்ப்போம்." - "மகாராஜா அவர்கள், எனக்காக முயற்சி செய்கிறீர்கள் என்பதை நன்கு அறிவேன். அதனை சற்று விரிவுபடுத்த வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இப்பொழுது வந்துள்ளது என்பதை மட்டும் நினைவுபடுத்தவே வந்துள்ளேன்." "நாளையே நமது ராயசத்தை இராமநாதபுத்திற்கு அனுப்பி அங்குள்ளவர்களுடன் கலந்து பேசி வருமாறு செய்கிறேன். பின்னர் தக்க நடவடிக்கை மேற்கொள்வோம்." திருமலை நாயக்கரது பேச்சு தம்பித்தேவருக்கு ஆறுதல் அளித்தது. இருக்கையில் இருந்து எழுந்த அவர், புறப்பட உத்தரவு கோரினார். "இப்பொழுது மதியமாகிவிட்டது. பகலுணவை இங்கு முடித்துவிட்டுப் புறப்படுங்கள். . . . ராயசம், தேவருக்கு உணவு பரிமாறஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறியவுடன் தம்பித்தேவரை அழைத்துக் கொண்டு விருந்து மாளிகைக்குச் சென்றார் ராயசம். மன்னர் திருமலை நாயக்கரது ராயசம் இராமநாதபுரம் கோட்டைக்குச் சென்றார். மரணப்படுக்கையில் இருந்த தளவாய் சடைக்கத்தேவரையும் மற்றும் அரசகுடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே அவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள தம்பித் தேவருக்கு அடுத்த பட்டத்தை அளிப்பது பற்றி ஆலோசனை கலந்தார். தம்பித் தேவர், கூத்தன் சேதுபதியின் மகன். செம்பி