பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எஸ். எம். கமால் நாட்டு மறத்தி வயிற்றில் பிறக்காவிட்டாலும், மன்னரது இரண்டாவது மனைவியின் மகன். மன்னரது தங்கை காதலிநாச்சியாரது மகன் தனுக்காத்த தேவன் மன்னரது மகளை மணந்த மருமகன். இவர்களில் யாரை ஏற்பது, யாரை மறுதளிப்பது? இருவரும் உரிமைக்காரர்கள். இவர்களைத் தவிர தங்கையின் e5Jeße,UTíL/ இரு மக்களான நாராயணத் தேவரும், ரகுநாதத் தேவரும் உள்ளனர். மன்னரைத் தாக்கியுள்ள நோயைவிட இந்த மன நோயே பெருநோயாக தளவாய் சேதுபதி மன்னருக்குப் பட்டது. மதுரைராயசத்திடம் சேதுபதி மன்னர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அரண்மனையில் உள்ள பெரியவர்களுக்கு தம்பித் தேவரையும் தனுக்காத்த தேவரையும் பிடிக்கவில்லை. நாட்டைப் பரிபாலிக்கும் தகுதி தனுக்காத்த தேவரது தமையன் ரகுநாத திருமலைத் தேவருக்குத்தான் உள்ளது என்பது அவர்களது கருத்து. இலை அனைத்தையும் ராயசத்தின் மூலம் கேட்டு அறிந்த மன்னர் திருமலைநாயக்கர் சம்மந்தப்பட்ட மூன்று தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத் தக்க திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தார். அதாவது, சேதுநாடு மூன்று பங்காக பிரிவினையாகிறது. காளையார் கோவில் பகுதி தம்பித் தேவர், திருவாடானைப் பகுதி தனுக்காத்த தேவர், இராமநாதபுரம் பகுதி ரகுநாத திருமலைத் தேவர். சுய நலக்காரர்கள் இத்திட்டத்தால் வாயடைத்துப் போயினர். திருமலை நாயக்கரது திட்டத்தைக் கேள்விப்பட்ட தளவாய் சேதுபதி சேது நாட்டின் பிரிவினையைக் காண்பதற்கு விருப்பப்படாதவர் போல கண்ணை மூடிவிட்டார்.