பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 75 தனது சிறிய தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்திமச் சடங்குகளை தம்பித் தேவர் நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் காளையார் கோவில் சீமைக்கும், தனுக்காத்த தேவர் திருதவாடானை சீமைக்கும், ரகுநாத திருமலைத் தேவர் இராமநாதபுரம் சீமைக்கும் மன்னர்களாயினர். மறவர் சிமைப் பிரிவினையால் வலுவிழந்து மறவர்களால் மதுரை அரசுக்கு ஆபத்து ஏற்படும் நிலை அல்லது மறவரது வலிமையைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பது மன்னர் திருமலை நாயக்கரது திட்டத்தின் உட்கிடக்கை ஆனால் அவரது திட்டம் தீர்க்கமானது அல்ல என்பதை காலம் விரைவில் உணர்த்தியது. காலமெல்லாம் சேதுபதியாக வேண்டும் என கனவு கண்டார் தம்பித் தேவர் என்றாலும் அரசராக நீண்ட நாள் வாழ இன்றைவனது நாட்டம் இல்லை. சில மாதங்களில் இவர் காலமானதும். திருவாடனையிலும் தனுக்காத்த தேவர் காலமானார். இவைகளை தெய்வ சங்கல்பம் என்று கருதிய ரெகுநாத திருமலை சேதுபதி, பிரிந்த பகுதிகளை மீண்டும் ஒன்றிணைத்து ஒன்றுப்பட்ட சேதுநாட்டின் மன்னர் ஆனார். திருமலை நாயக்கர் எதிர்பார்த்தபடி உள்நாட்டுப் பூசல், குழப்பம் இல்லாத அரசியல் தளமாக மிகுந்த வல்லமையுடன் சேதுநாடு விளங்கியது.