பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 77 கன்னடப்படைகளுக்கு எதிரான போரை நடத்தச்சொல்லி கொடுத்து திருமலை நாயக்கர் ஆணை பிறப்பிக்கலாம் தானே! ஆம், திருமலை நாயக்க மன்னரது சுய சாதிக் காரர்களான நாயக்கர், அவரைப் போல தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தார், ரெட்டியார், நாயக்க பாளையக்காரர்கள், மதுரை மண்டலத்தில் தாராபுரம் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை, மன்னர் திருமலைக்கு கட்டுப்பட்டவர்கள் இருக்கின்றனர் அல்லவா? ஆம் அவர்களில் ஒருவருக்கு கன்னடப் படையை வெற்றி கொள்ளும் கூட்டுப் பொறுப்பை கொடுத்தால் என்ன? இவைகளை நன்கு யோசித்தார் திருமலை நாயக்கர். அவர்களிடம் திறமை இருக்கலாம், கன்னடப்ருெம்படையைப் பொருதி அழிக்கும் பேரான்மை இருக்கிறதா...இல்லை...இல்லை. - இருப்பதாகவே கொள்வோம். வெற்றி பெற்றவுடன் ராஜவிசுவாசத்துடன், நாணயம், நேர்மையுடன் அவர்கள் நடந்து கொள்வார்களா? வெற்றி மமதையில் அவர்களே தங்களை மதுரை மன்னராக ஏன் பிரகடனப்படுத்திக் கொள்ளக் கூடாது? இதற்கும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? கிழட்டுச் சிங்கத்திற்கு கட்டுப்படாத நரிகள் இருக்கத்தானே செய்யும். ஆதலால் நம்பிகைக்கு உரயவரான சேதுபதி மன்னரை மதுரைக்கு வந்து உதவுமாறு திருமலை நாயக்கர் கேட்டுக் கொண்டார். அந்தப் பணியும் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது. سـكييسكي كيركيركييتيكيــــــــ மறவர் சீமை அரசியலை இவ்விதம் சிறப்பாக இயக்கி வந்த தம்மீது கொலையாளி குறிவைக்க என்ன காரணம் இரண்டு. முறை குறிதவறிய கட்டாரி, மூன்றாவது முறையும் இலக்கைத் தவறிவிடுமா? அ துவரை குற்றவாளியை பிடிக்க காத்து இருப்பது அறிவுடைமையாகுமா?