பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எஸ். எம். கமால் அந்த கொலை செய்யத் துடிக்கும் சதிகாரன் யார்? சேதுபதி பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி நோக்கு கொண்டவனாகத்தான் அவன் இருக்க வேண்டும் அப்படியானால். . . . . . காளையார் கோவில் சீமையைப் பெற்று ஆட்சி செய்த தம்பித்தேவருக்கு உரிய வாரிசு இல்லை. திருவாடனைச் சீமையை ஆட்சி செய்ததனுக்காத்த தேவருக்கு ஆண் வாரிசு இல்லை. அவரது மனைவி தளவாய் சேதுபதியின் மகள். அவரது தாயார் மங்கை நாச்சியார் இராமேசுவரம் போரில் வீரசொர்க்கமடைந்த நாடு கலக்கி வன்னியத் தேவரது மகள் - வன்னியத் தேவரது ஆண் மக்கள் இருவரும் புகலூர்கோட்டைபோரில் இராமப்பையனுடன் பொருதி தியாகிகளாகிவிட்டனர். அவரது வழியினர் வேறு யாரும் இருக்கலாமோ? இருந்து இருந்தால் இதுவரை அவரது வழியினர் என்று யாரும் இந்த பதினைந்து வருட ஆட்சியில் எந்த உதவியும் கேட்டு வரவில்லையே! அவர்கள் இருக்கிறார்களா? வேறு யாராக இருக்கும்? வேறு யாராக இருக்கும் இப்படியே வினாக்களை அடுத்துவினாக்கள். மன்னரது தலை நொறுங்கிவிடுவது போன்ற வேதனை. பொறுக்க முடியாத வேதனை "இராமநாதா எல்லாம் உங்களது கருணை" என்று வேதனை விரவிய மன்னனது சொற்கள் அப்பொழுதுதான் அங்கு வந்த மகாராணியாரின் காதுகளில் விழுந்தன. "மகாராஜா தங்களுக்கு என்ன ஏற்பட்டது? நான் என்றும்ே கேட்டிராத வேதனையுடன் தங்களது வாய் குழறியதே"