பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 79 மகாராணியார் பதட்டத்துடன் சொன்னார். தொடர்ந்து, "இரண்டு நாழிகை நேரமாக தங்களது வரவை எதிர்பார்த்து நீராவி மாளிகையில் காத்து இருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இந்தச் சவுக்கையில் தாமதித்து இருந்ததையும், வாய்விட்டு தங்கள் வேதனையை வெளியிட்டு இருப்பதையும் இப்பொழுது தான் கண்டேன். இங்கே என்ன நடந்தது? நான் கூட தெரிந்துகொள்ளடக் கூடாதா என்ன?" என்று தோடர்ந்து மகாராணியார் மன்னரை நெருக்கி கேட்டார். "இன்னும் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? என்னை கொன்றுவிட சதிகாரன் ஒருவன் புறப்பட்டு இருக்கிறான். என்மீது கட்டாரியைப் பாய்ச்ச இருமுறை முயற்சி செய்துள்ளான். நமது இராமநாத சுவாமியின் கருணையால் அவன் முயற்சி வெற்றி பெறவில்லை. அத்துடன், அவன் யாரென்பதும் கடந்த ஒரு வருடமாக நமது கண்களுக்கு புலப்படவில்லை. அவனது இரண்டாவது கொலை முயற்சி பற்றி செய்தி இன்று பிற்பகல்தான் கிடைத்தது. அந்த சிந்தனையில் நீண்ட நேரமாக இங்கே அமர்ந்துவிட்டேன்." "இராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் நம்மை கைவிட்டு விட மாட்டார்கள். தைரியமாக இருங்கள்." ராணியார் தேறுதல் குறினார். "எனது தைரியத்திற்கு குறைவில்லை. ஆனால் திருப்புல்லானி திருக்கோயில் திருப்பணியும் அடுத்து இராமேசுவரம் இரண்டாம் பிரகாரம், கோபுரத் திருப்பணியும் தடை பட்டு விடக்கூடாதே என்ற அச்சம்தான் என்னுடலில் விரவி நிற்கிறது."