பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எஸ். எம். கமால் 'வாருங்கள். நமது பயத்தையும் வேதனையையும் இறைவனிடம் சொல்வோம். இன்று தங்களுக்காக சொக்கநாத சுவாமி கோவிலில் ஆயுஷ் ஹோமம். நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தாங்களும் அர்த்தம ஜாம பூஜைகளில் கலந்து கொளவதாக கோவில் பேஷ்காரிடம் சொல்லி அஸனுப்பினரீர்கள் அல்லவா? நினைவு இருக்கிறதா?" "ஆமாம். இப்பொழுது கோயிலுக்குப் புறப்படலாம்" ம்ன்னர் சொன்னவுடன் ராணியாரும் மன்னரும் சவ்வுக்கை முகப்பிற்கு வந்தனர். அங்கே இரண்டு பல்லக்குகளுடன் பல்லக்குத் துரக்கிகள் காத்து இருந்தனர். அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டு இரண்டு பல்லக்குகளிலும் அமர்ந்தனர் மன்னரும் ராணியாரும். அவர்களைத் துரக்கிச் சுமந்தவாறு பல்லக்குகள் கோட்டையின் மேற்குப் பகுதியில் அரண்மனைக்கு தெற்கே உள்ள சொக்கநாத சுவாமி கோவில் நோக்கி நகார்ந்தனர். 米米米