பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 எஸ். எம். கமால் _திருமேனிகளைப் பல்லக்கில் இருந்து இறக்கி மண்டபத்திற்கு கொண்டு வந்தனர் கோயில் பணியாளர்கள். அங்கு மைக்கப்பட்டிருந்த மேடையின் பட்டு விரிப்பின் மேல் அவைகளை/كگی வைத்தனர். அந்த மேடைக்கு முன்னர் நீண்ட விரிப்புக்கள் விரிக்கப்பட்டிருந்தன. மண்டபத் தூண்களில் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த தீவெட்டிகள் பிரகாசமாக சுடர்விட்டு கொண்டிருந்தன. பிரதானியுடன் அங்கு வந்த சேதுபதி மன்னர் தெய்வத் திருமேனிகளுக்கு அருகில் இடப்பட்டிருந்த சிறப்பான இருக்கையில் மன்னர் அமர்ந்தார். அதுவரை மன்னரைச் சுற்றி நின்று கொண்டிருந்த குடிமக்களும் அங்கு இருந்த விரிப்பில் அமைதியாக அமர்ந்தனர். திருமேனிக்குப் பின்னால் இருந்த திரையை அடுத்து முழு ஒப்பனையுடன் நின்று கொண்டிருந்த தாசி கல்யாணி மன்னர் முன்வந்து சேவித்துவிட்டு விரிப்பின் மையப் பகுதிக்குச் சென்றாள். நடனக் குழுவின் வீணை, மத்தளம். குழல், செண்டை, சிங்கி ஆகியவைகளின் இனிய கூட்டு இசை ஒலிக்கத் தொடங்கி நிகழ்ச்சிக்கு களை கட்டியது. வழக்கமாக நடைபெறும் சதிர்க்கச்சேரியாக அல்லாமல் அன்றைய நிகழ்ச்சி ஆலவாய் நகரில் அமர்ந்துள்ள சோமசுந்தரக் கடவுளது திருவிளையாடல் சிலவற்றைச் சித்தரிக்கும் நடன இசை நிகழ்ச்சியாக அமைந்து இருந்தது. சோமசுந்தரர் சித்தராக வந்து,கல்யானைக்கு கரும்பைக் கொடுக்க, அதனை அந்த யானை கடித்துச் சாப்பிடும் அதிசயத்தையும், வணிகர் குலக் கொடிக்கு வளையல் விற்ற விதத்தையும், வாதவரடிகளுக்கு ஞானம் உபதேசித்ததையும், நரிகளைப் பரிகளாக்கி பாண்டியனிடம் ஒப்புவித்தது, கால்மாறி ஆடியது, ஆகிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஐந்து திருவிளையாடல்களை மட்டும் தக்க வேடங்கட்டி ஆடிய கலியாணியின் நடனத்தைக் கண்டு ரசித்த மக்கள் மகிழ்ச்சி மேலிட :த்ரவாரம் செய்தனர்.