பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 83 இரண்டு அல்லது மூன்று நாழிகை நேரம் இருதய உலகையே மறந்து கலியாணியின் நடன நிகழ்ச்சியைக் கண் சிமிட்டாது கண்டுகொண்டிருந்த மக்கள், மங்களம் பாடுவதை கேட்டபொழுது உணர்வு பெற்றனர். நிகழ்ச்சி முடிந்தவுடன்தாசி கலியாணி சேதுபதி மன்னர் முன் வந்து கைகூப்பி பணிந்து நின்றாள். அவளது நடனமும், அழகுப் பொலிவும் அபிநயங்களிலும் மனத்தைப் பறிக்கொடுத்த மன்னர், "கலியாணி நடனம் மிக நன்றாக இருந்தது. டாரம்பரிய சதிர்க் கச்சேரிகளையே மீண்டும் மீண்டும் நடத்தி மக்களது ஆதரவைப் பெற்று வரும். தேவதாசிகளைப் போல் அல்லாமல், நீ இத்தகைய புதுமையான நடனத் தொகுப்பை எவ்விதம் தேர்ந்தெடுத்தாய்" கலியாணியிடம் வினவினார். "மகாராஜா இளமையில் இருந்தே எனக்கு பெரியபுராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த இறை உணர்வை, பக்தியை, சாதாரண மக்களிடம் நன்கு வளர்க்க வேண்டும் என்ற சிறந்த இலட்சியத்துடன் சேக்கிழார் சுவாமிகளும், பரஞ்சோதி முனிவரும் அந்த இலக்கியங்களை அழகுத் தமிழில் இயற்றி இருக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு அந்த நிகழ்ச்சிகள் வழி அந்த இலக்கியப் பாடல்களை மக்களுக்கு ஒப்பனையுடன், அபிநயத்துடன் நடித்துக்காட்டினால் என்ன என்ற உணர்வு என்னுள்ளே ஏற்பட்டது..... அவ்வளவுதான்" "சபாஷ் நல்ல தமிழ்த் தொண்டும்கூட தொடர்ந்து ன்னும் பல இலக்கியக் காட்சிகளை இவ்விதம் மக்களுக்கு எளிதாக ஒf সেচ தா உணர்த்தி பயன்பெறச் செய்வாயாக எமது வாழ்த்துக்கள்" "எல்லாம் மகா சமுகத்தின் ஆதரவுதான்" என்று