பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 எஸ். எம். கமால் பவ்யமாக கலியாணி பதில் சொன்னவுடன் மன்னர் பிரதானியை நோக்கினார். குறிப்பறிந்த அவரும் மன்னரிடம் நெருங்கி வந்து ஏதோ சொன்னார். அடுத்து வெள்ளித் தட்டு ஒன்றில் ஒரு பட்டுப் புடவை, பூச்சரம் காளாஞ்சி ஒரு பொற்கிழி, ஆகியவைகளுடன் மன்னரிடம் வந்து மெளனமாக நின்றார் பிரதானி. "கலியாணி! இதோ எங்கள் சமஸ்தான மரியாதை பிரதானியாரிடமிருந்து பெற்றுக் கொள். உனக்கும் உனது வழியினருக்கும் ஜீவித மானியமாக பக்கத்து கிராமமாகிய பாறைக்குளத்தை சர்வமான்யமாக அளிக்கிறேன். பிரதானி அதற்கான ஓலை முறியை உன்னிடம் அப்புறம் கையளிப்பார்." மன்னரது உத்தரவைக் கேட்ட கலயாணியின் உடல் நன்றிப் பெருக்கால் நடுங்கியது. அப்படியே மன்னர் முன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு, பிரதானி நீட்டிய பரிசுத் - தட்டைப் பெற்றுக் கொண்டாள். அதனைக் கவனித்துக்கொண்டிருந்த மக்களும் ஆரவாரம் செய்தனர். "சேதுபதி மன்னர் வாழ்க" மன்னர் இருக்கையை விட்டு எழுந்து அனைத்து மக்களது வணக்கத்தையும் ஏற்றவாறு பிரதானி, ஏவலர், புடைசூழ அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த மதுரை சமஸ்தான சேவகர்கள், மன்னரைக் கண்டதும் வணக்கம் செலுத்தினர்.